கவிதைப் பேழை 3 மதிப்பெண் வினாக்கள்
1.தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
1. அன்னை மொழி
2. செம்மொழி
3. பழமை
4. குமரி ஆட்சி
5. பாண்டியனின் மகள்
6. திருக்குறளின் மாண்பு
7.பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, நற்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆக இருப்பவள்.
2. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.
தமிழ்:
1. முத்தமிழ்
2. முச்சங்கம்
3. ஐம்பெரும் காப்பியங்கள்
4. சங்கப் புலவர்கள் காத்தமை
கடல்:
1. முத்து
2. மூவகைச் சங்கு
3. வணிகக் கப்பல்கள்
4. சங்கினைக் காப்பது
3. மழை நின்றவுடன் புலப்படும் காட்சியை வர்ணித்து எழுதுக
குறிப்பு : இலைகளில் சொட்டும் நீர்- உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்’ என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்
மழை நின்றவுடன் புலப்படும் காட்சி
இலைகளில் ‘சொட் சொட்’ என்று நீர் சொட்டுகிறது. உடலில் மெல்லிய குளிர் ஓடுகிறது. தேங்கிய குட்டையில் ‘சளப் தளப்‘ என்று குழந்தைகள் குதிக்கின்றனர்; ஓடும் நீரில் காகிதக் கப்பல் விடுகின்றனர்.
4. கவிதையைத் தொடர்க.
தண்ணீர் நிறைந்த குளம்
தவித்தபடி வெளிநீட்டும் கை
கரையில் கைபேசி படமெடுத்தபடி
கண்ணோட்டம் இல்லார்
கருத்தில் கொள்ளார்
கணத்தில் உதவிடுவோம்!
உயிரைக் காத்திடுவோம்!!
5.“மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
உவமை சுட்டும் செய்தி: இறைவன் நீங்காத துன்பத்தைத் தந்தாலும் நான், அவனது அருளையே எப்போதும் எதிர்பார்த்து வாழ்கிறேன் என்று குலசேகர ஆழ்வார் வேண்டுகிறார்.
6. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார் . அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
1. இளமையில் கல்
2.கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
3.கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
என்று எடுத்துரைப்பேன்.
7.கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
1. இளைப்பாறிச் செல்லுங்கள்
2. இரவில் தங்குங்கள்
3. சிற்றுரை அடையுங்கள்.
4.நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
5. உரிமையுடன் நுழையுங்கள்.
6.மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் பெறுவீர்கள்.
8. மன்னர், இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.
1)புலவரின் கவிதையை மன்னன் அவமதித்தான்.
2) புலவர் இறைவனிடம் முறையிட்டார்.
3)இறைவன் வேறு கோவிலுக்குச் சென்று தங்கினார்.
4)இதை அறிந்த மன்னன் தன்னை மன்னிக்க வேண்டினான்
5) புலவருக்குச் சிறப்புச் செய்தான்.
9. நவீன கவிதையில் வெளிப்படும் நுண்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.
பூத்தொடுத்தல்
1) மலர்களைத் தளரப் பிணைத்தால் தரையில் நழுவும்.
2) இறுகப் பிணைத்தால் காம்புகள் முறியும்.
3) அளவாய்ப் பிணைக்க வேண்டும்.
பூப்பறித்தல்
1) மாரிக்கு கையால் பூப்பறித்தால் காம்பழுகிப் போகும்.
2) விரலால் பூப்பறித்தால் வெம்பிவிடும்.
3) அதனால், தங்கத்துரட்டி கொண்டு மலர் எடுத்தார்.
10. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
1. காலில் கிண்கிணிச் சிலம்புகள் ஆடின.
2. இடையில் அரைவடங்கள் ஆடின.
3. பசும்பொன் வயிறு சரிந்து ஆடியது.
4. நெற்றியில் சுட்டி பதிந்தாடியது.
5.காதில் குண்டலமும் குலைகளும் அசைந்தாடின.
6. கொண்டை முத்துகளோடு ஆடியது.
7. பவளமேனியும் ஆடியது.
11. வள்ளுவம் , சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
அமைச்சு
1)கருவி, காலம், செயலின் தன்மை, செய்யும் முறை அறிந்து செய்பவரே அமைச்சர்.
2)மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சிமுறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகியவை அமைந்தவரே அமைச்சர்
3)நுண்ணறிவும் நூலறிவும் பெற்றிருப்பவரே அமைச்சர்.
4)ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செய்பவரே அமைச்சர்.
12. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
1)உறவினர் இல்லாதவர் எப்படிப் பகைவரின் வலிமையை எதிர்கொள்வார்?
2)துணிவு, அறிவு, அன்பு, உதவி இல்லாதவர் எளிதில் பகைக்கு ஆட்பட நேரிடும்.
13.முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு. ப. ராஜகோபாலன் கவிபாடுகிறார்?
ஏர் புதிதா?
1) மண் பதம் ஆகிறது.
2) வயலில் உழுகின்றனர்
3) மழை பொழிகிறது. நிலம் சிலிர்க்கிறது. நாற்று நிமிர்கிறது. தெய்வம் காக்கிறது.
14. பகர்வனர் திரிதரு நகர வீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”
அ). இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
சிலப்பதிகாரம்
ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.
பகர்வனர்
பட்டினும்
இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.
பகர்வனர்
நகர வீதியும்
ஈ). காருகர் – பொருள் தருக.
காருகர் – நெய்பவர்
உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
சந்தனம், அகில்
15. பின்வரும் பத்தியைப் படித்து மையக் கருத்தை எழுதுக.
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவான இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்துத் தொடக்கத்தில் அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.
சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் பழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிசப் பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன. எனினும், இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது. இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்தி கோளின் வமிச பரம்பரை மிகவும் விரித்துக் கூறியுள்ளன
மையக் கருத்து
பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி.
சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சி ஆண்டு, போர் வெற்றிகள், வரலாறு, வாழ்த்து, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவை காணப்படும். தொடக்கத்தில் சுருக்கமாக எழுதினர்.
16. வாளித் தண்ணீர், சாயக்குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி ஒரு பத்தி அமைக்க.
காலக்கழுதை
1) கையிலே வாளித் தண்ணீர்,
2) சாயக்குவளை,
3) கந்தைத் துணி,
4) கட்டைத்தூரிகை கொண்டு
5) சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார் கவிஞர்.
17.“சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம்: நாகூர் ரூமி எழுதிய ‘சித்தாளு’ என்ற கவிதையில் இடம் பெற்றுள்ளது.
பொருள்: அடுத்த வேளை உணவுக்காக கல்சுமக்கும் சித்தாளின் மனத்துயரங்களைச் செங்கற்கள் அறியாது.
18.எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?
‘எவையெல்லாம் அறியேன்’ என்று கருணையன் கூறியவை
1. பிழைக்கும் வழி.
2. உடலின் தன்மை.
3. உணவு தேடும் வழி.
4. காட்டில் செல்லும் வழி