சிறப்புடைய இடுகை

உரைநடை உலகம் 3 மதிப்பெண் வினாக்கள் (13)

உரைநடை உலகம் 3 மதிப்பெண் வினாக்கள்

1.‘புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’. இதுபோல் இளம் பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

1. நெல்நாற்று நடப்பட்டுள்ளது

2. மாங்கன்று நடப்பட்டுள்ளது

3. தென்னம்பிள்ளை நடப்பட்டுள்ளது

4. வாழைக்குருத்து நடப்பட்டுள்ளது

5. சோளப் பைங்கூழ் நடப்பட்டுள்ளது.


2. நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்... முதலிய தலைப்புகளில் ‘காற்று’ தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால்... உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

1. அமிழ்தாக நான்

2. ஆற்றலாக நான்

3. இலக்கியத்தில் நான்

4. உருமாறும் நான்

5. சடங்குகளில் நான்

6. பல பெயர்களில் நான்


3.சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் எழுதுக.

சோலைக் காற்று: நலமா?

மின்விசிறிக் காற்று: நலம். வியர்வை துடைத்துக் களைப்பைப் போக்குகிறேன். நீ?

சோலைக் காற்று: தென்றலாய் வீசி மகிழ்ச்சி தருகிறேன்.

மின்விசிறிக் காற்று: காற்று மாசுபாடு குறித்துக் கவலை அடைகிறேன்.

சோலைக் காற்று: நானும்தான் நண்பா.


4. ஆற்றுப்படுத்தல் என்பது அன்றைக்குப் புலவர்களையையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

ஆற்றுப்படுத்துதல் அன்றும் இன்றும்


அன்றைய ஆற்றுப்படுத்துதல்

1. அமிழ்தமே கிடைத்தாலும் பகிர்ந்து உண்பார்.

2. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்பார்.

3. தாமே உண்பது இழிவு எனக் கருதுவார்.

4. இருப்பதைப் பகிர்ந்து உண்பார்.


இன்றைய வழிகாட்டுதல்

1. இலவசக் கல்வி நிறுவனங்கள்

2. தொண்டு நிறுவனங்கள்

3. மத நிறுவனங்கள்

4. யோகா


புதிதாக இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர். திருவிழாக்காலங்களில் ஊருக்கு வரும்போது புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. இப்படியாகக் காலமாற்றம் தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துக்களை எழுதுக.

1. தெரிந்தவரே விருந்தினர்.

2.ஆதரவற்றோர் இல்லங்கள்- பெருக்கம்

3.இல்ல விழா ஏற்பாட்டாளர்- பெருக்கம்


இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

1. ஆம்

2.படிப்பு, பணி- வீட்டிலிருந்தே செய்ய முடிகிறது.

3. மழை, புயல், வறட்சி அறிய…

4.வள மேலாண்மை மற்றும் திட்டமிடல்


மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியில் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படுகின்ற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில்நுட்பம்

1.ஆபத்தான கடினமான செயல்களைச் செய்வது

2.குழந்தைகளைப் பாதுகாப்பது, வயதானவர்களுக்குத் தோழனாய் இருப்பது

3. வீடு, அலுவலகப் பணி செய்வது


ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போது மொழிபெயர்ப்பது, விளக்குவது (interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிக் கேட்பியில் (headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர்கள் முன் உள்ள காதணிக்கேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார். இப்பகுதியில் இருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

1) ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறதா?

2) மொழிபெயர்ப்பது என்பது யாது?

3) விளக்குவது என்பது யாது?

4)ஐ.நா. அவையில் மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பர்?

5)காதணிக்கேட்பியின் பயன்பாடு யாது?


படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து இரண்டு வினாக்களையும் அவற்றுக்கான விடைகளையும் எழுதுக.

தேவராட்டத்திற்கான இசைக்கருவி யாது?

தேவதுந்துபி


கரகாட்டம் என்றால் என்ன?

கரகத்தைத் தலையில் வைத்துத் ஆடுவது.


“தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

இடம்: ம.பொ.சி. அவர்களின் ‘எனது போராட்டம்’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

விளக்கம்: நீதிபதி வாஞ்சு ஆணையத்தை எதிர்த்து ம.பொ.சி. அவர்கள், “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார்.


சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

இன்றைக்கும் தேவையான அறங்கள்

1. வணிக நோக்கம் இல்லாமை

2. நீர்நிலை உருவாக்குதல்

3. ஈதலில் மகிழ்தல்


சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்’ என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு : சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்

வணக்கம்.

1. மாசுபடுத்தாமை கடமை.

2.மாசுபாட்டினால் ஓசோன் சிதைவு, வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஏற்படுகிறது.

3.பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

4.இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்


ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதைமாந்தர் வாயிலாக விளக்குக.

தர்க்கத்திற்கு அப்பால்...

1) வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டது.

2) கொண்டாட விரும்பினார்.

3) ஒரு ரூபாயில் ஊர் திரும்ப முக்கால் ரூபாய் ஒதுக்கினார்.

4)இரண்டு அணாவில் காபி அருந்தினார்.

5)இரண்டணாவை பிச்சை இட்டு மகிழ்ந்தார்.

6)டிக்கெட் விலை ஓரணா கூடியிருந்தது.

7) யாசிக்கும் நிலை வந்ததை எண்ணி வாழ்க்கையின் தர்க்கம் புரிந்தார்.