சிறப்புடைய இடுகை

விரிவானம் 8 மதிப்பெண்கள் (8)

 விரிவானம் 8 மதிப்பெண்கள்

1. ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக

சூழல்-வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.

உரைநடையின் அணிநலன்கள்

பாரதி: வாங்க. நலமா?

மலர்: நலம். என்ன படிக்கிறீர்கள்?

பாரதி: தமிழ் இலக்கியம்.

மலர்: எனக்குத் தமிழ் இலக்கியம் பற்றிக் கூறுங்கள்.

பாரதி: தாமரை போன்ற முகம் - உவமை.

மலர்: ஆகா... அழகு.

பாரதி: முகநிலவில் வியர்வை முத்துகள்- உருவகம்.

மலர்: இனிமை.

பாரதி: “மரங்கள் கூப்பிடும், விருந்து வைக்கும்.” இது இலக்கணை.

கற்க கசடற-மோனை

கற்க நிற்க- எதுகை

‘கலப்பில்லாத பொய்’. இது முரண்.

“குடிசைகள் ஒருபக்கம்; கோபுரங்கள் மறுபக்கம்”. இது எதிரிணை இசைவு.

மலர்: சுவையாக இருக்கிறது. நன்றி!


2. ‘புயலிலே ஒரு தோணி’ கதையில் இடம்பற்றுள்ள வருணனைகளும் அடுக்கு தொடர்களும் ஒலிக் குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?

புயலில் தோணி படும்பாடு

வருணனைகள்

1. வெயில் மறைந்து விட்டது.

2. புழுங்கிற்று.

3. அலைகள் நெளிந்தன.

4. ஒரே இறுக்கம்.

5. இடி முழக்கம்.

6. வெள்ளம்.

7. சூறாவளி-மழை- காற்று

8. தொங்கான் திணறுகிறது.

அடுக்குத் தொடர்கள்

1. அருவியருவி

2. தாவித்தாவி

3. இருட்டிருட்டு

 ஒலிக்குறிப்புச் சொற்கள்

1. நொறு நொறு நொறுங்கல்

2. நடுநடுங்கி

3. மரமரப்பு, கிறுகிறுத்து

4. ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்.


அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை ‘கோபல்லபுரத்து மக்கள்’ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

கோபல்லபுரத்து மக்கள்

பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்.

புதியவனின் தோற்றம்

வயோதிகன் போலவும் சந்நியாசி போலவும் இருந்தான்.

அன்னமய்யாவின் அரவணைப்பு

1.அன்னமய்யா, அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

2.நீச்சுச் தண்ணீர் வாங்கி வரட்டுமா? என்றான்.

3. எழுந்திருக்க கையை நீட்டினான்.

4.தோளைப் பிடித்து நடக்கும்படி வேண்டினான்.

அன்னமய்யா அளித்த ஜீவ ஊற்று

1.நீத்துப் பாகத்தை வடித்துக் கொடுத்தான்.

2. உட்கார்ந்து குடிக்கச் சொன்னான்.

3. மகுளியை வார்த்துக் கொடுத்தான்.

4.குழந்தையின் முகத்தைத் தாய் பார்ப்பது போல அன்னமய்யா பார்த்தான்

பெயர்ப்பொருத்தம்

1.வாலிபனின் தூக்கம் முடியும் வரை காத்திருந்தான்.

2.உங்கள் ஊர்ப்பெயர் என்ன? எங்க இருந்து வர்றீங்க? எங்க போகணும்?” என்று அன்புடன் கேட்டான்.

3. பதிலுக்கு அந்த வாலிபன், “உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.

அன்னமய்யா

அன்னமிட்டவனின் பெயர் அன்னமய்யா.



கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துக்களை விவரிக்க.

புதிய நம்பிக்கை

முன்னுரை

கல்வியறிவற்ற சமூகத்திலிருந்து வந்து, அந்த சமூகத்தையே ஒளிவெள்ளத்தில் நிரப்பியவர்களில் ஒருவர்தான் மேரி.

மேரியின் குடும்பம்

1. கருப்பினச் சிறுமி மேரி.

2.பருத்திக் காட்டில் வேலை செய்யும் குடும்பம்

உன்னால் படிக்க முடியாது

1. புத்தகத்தை என்னிடம் கொடு.

2. நீ இதை எடுக்கக்கூடாது.

3. உன்னால் படிக்க முடியாது.

என்ற வெள்ளைக்காரச் சிறுமியின் வார்த்தைகளால் மனம் கலங்கினாள்.

மேரியின் விருப்பம்

1. நான் படிக்க வேண்டும் என்றாள்.

2. ஆனால் பள்ளிக்கூடம் கிடையாது.

பட்டம் பெற்ற மேரி

1.வெள்ளைக்காரப் பெண் மேரியைப் படிக்க அழைத்தாள்.

2.பத்து மைல் தூரம் நடந்து சென்று படித்தாள்.

3. பட்டம் பெற்றாள்.

மேரியின் உயர்கல்விப் பயணம்

1.அடுத்து கல்லூரியில் படிக்க விரும்பினாள்

2. ஊரே வழியனுப்பி வைத்தது

3. வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி பணம் அனுப்பினாள்.

முடிவுரை

1.ஒடுக்கப்பட்ட சமூகம் எழுவதற்குக் காரணமாக அமைந்தது, மேரி பெற்ற கல்வி.

2.மேரி அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசகர் ஆனார்.


குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

மாணவன் – கொக்கைப் போல, கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணர முடியும் – ஆசிரியர் விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

கதைக்களம்: தத்துவமேதை சாக்ரடீஸ் அவர்களின் வீடு

கதைமாந்தர்கள்: சாக்ரடீஸ், அவரது மாணவர்

மாணவன்: ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

சாக்ரடீஸ்: மாணவன் என்பவன், கொக்கைப்போல, கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப்போல இருக்க வேண்டும்.

மாணவன்: ஒன்றும் புரியவில்லை ஐயா. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா.

சாக்ரடீஸ்:

1)கொக்கு பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து பிடித்துவிடும். மாணவன் வாய்ப்புக் கிடைக்கும்போது பயன்படுத்த வேண்டும்

2)கோழி குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். மாணவர்கள் நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

3)எந்த உணவில் உப்பைக் கலந்தாலும் உப்பின் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத்துறையாக இருந்தாலும் அதில் தனித்தன்மையை வெளிப்படுத்தி, இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்.

மாணவன்: எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?

சாக்ரடீஸ்: மாணவன் என்பவன் உன்னைப் போல தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.


அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான்’ என்னும் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.

ஒருவன் இருக்கிறான்

துணையே இல்லாதவர் என்று கருதி நாம் அலட்சியம் செய்பவருக்கும் துணை இருக்கிறது.

ஏழ்மையிலும் இரங்கிய வீரப்பன்

1)சிப்பந்தியாக வேலைசெய்து வந்தவன் வீரப்பன்.

2)குப்புசாமி துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, வீரப்பன்தான் சாப்பாடு போடுவான்.

3)கடன் வாங்கியாவது உதவிசெய்து வந்தான்.

கடிதத்தில் கசிந்த மனிதம்

வீரப்பனின் கடிதத்தில்

1) உயிர்நண்பன் எழுதிக் கொண்டது...

2)சதா உன் ஞாபகமாகத்தான் இருக்கிறேன்.

3)உனக்காகத் தினமும் கோவிலுக்குப் போகிறேன்.

4)மூன்றுரூபாய் கடன் வாங்கி அனுப்பியிருக்கிறேன்.

5)நான் சீக்கிரம் உன்னைப் பார்க்க வருவேன்.

6)உன்னைப் பார்த்தால்தான் நான் தின்னும் சோறு, சோறாக இருக்கும்

என்று உருக்கமாக எழுதியிருந்தான்.


நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம் – பள்ளிக் கலையரங்கம். நாள்: 08-03-2021

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் – தலைமை ஆசிரியரின் வரவேற்பு – இதழாளர் கலையரசியின் சிறப்புரை – ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவர் தலைவரின் நன்றியுரை.

மகளிர் நாள் விழா – அறிக்கை

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல்

1.8 மார்ச் 2021 மாலை 4 மணி அளவில் கலையரங்கத்தில் மாணவர்கள் கூடினர்.

2.ஆசிரியர்கள், தலைமையாசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர் கலையரசி ஆகியோர் வருகை தந்தனர்.

தலைமையாசிரியரின் வரவேற்பு

1. விழா, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது.

2.தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றார்.

3.சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

4.பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை

‘பெண்களின் முன்னேற்றம் பற்றிப் பேசினார். அவருடைய பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

“பெண்ணே நீ உனக்கென

வாழ்வது எப்போது?

உண்மையான மாற்றம் வரும்

அப்போது”

என்றார்.

ஆசிரியர்களின் வாழ்த்துரை

ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்

மாணவர் தலைவரின் நன்றியுரை

மாணவர் தலைவர் நன்றியுரை வழங்கினார்.

நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது


நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

பொம்மலாட்டம்

முன்னுரை

விரல் நுனியில் காட்சிகளை மாற்றி கண்முன்னே நிறுத்துவது இதன் சிறப்பம்சம்.

பாராட்டுரை

1.பொம்மலாட்டம் மகிழ்ச்சியைத் தரக்கூடியது

2. புதியபுதிய சிந்தனைகளை விதைப்பது.

3.விழா ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள்

நெகிழிப் பைகளின் தீமைகள்

1.கால்வாய்களில் அடைப்பு -வெள்ளப் பெருக்கு

2. கொசுக்கள் உற்பத்தி- நோய்ப் பரவல்.

3. பல்லுயிர்ப் பெருக்கச் சூழல் பாதிப்பு.

நிகழ்ச்சியின் தாக்கம்

1.நெகிழிப் பைகளின் தீமைகளை அறிந்துகொண்டோம்.

2.துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற மனமாற்றம் அடைந்தோம்

முடிவுரை

பள்ளிப்பாடத் திட்டத்தில் பொம்மலாட்டத்தை வைக்க வேண்டும்.