சிறப்புடைய இடுகை

இலக்கணம் இரண்டு மதிப்பெண் வினாக்கள், மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு (50)

இலக்கணம் இரண்டு மதிப்பெண் வினாக்கள். 2-3 வினாக்கள் கேட்கப்படும்

1.'வேங்கை’ என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.

1. வேங்கை (மரம்)-தனிமொழி

2. வேம்+கை (வேகின்ற கை)- தொடர் மொழி

3.பொதுவாய் அமைந்ததால் இது பொதுமொழி.


2 ‘உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண் வற்றாகும் கீழ்’ – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி அதன் இலக்கணம் தருக.

1. உடுப்பதூஉம் உண்பதூஉம்-இன்னிசை அளபெடை

2.ஓசை குறையாத இடத்திலும் அளபெடுப்பது இன்னிசை அளபெடை.


3 தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைச் சொற்களை விரித்து எழுதுக. தொடரில் அமைக்க.

1. தண்ணீர் குடி- தண்ணீரைக் குடி.

ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

2. தயிர்க்குடம் – தயிரை உடைய குடம்.

தயிர்க்குடத்தை எடுத்து வா.


4 ‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத்தொடர் ஆனது. ‘சிரித்துப் பேசினாள்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

‘சிரித்துச் சிரித்துப் பேசினாள்’


5 பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

1. பாரதியார் கவிஞர்- பெயர்ப் பயனிலை

2.நூலகம் சென்றார்-வினைப் பயனிலை

3. அவர் யார்?- வினாப் பயனிலை


6 வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன்- இத்தொடர் காலவழுவமைதி எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

நிகழ்ச்சியின் உறுதித்தன்மை குறித்து, இது காலவழுவமைதி ஆகிறது.


7 “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிரக் கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார். இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

“சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் கத்துமே தவிரக் கடிக்காது” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார்.


8 அமர்ந்தான்- பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்+த்(ந்)+த்+ஆன்

அமர் – பகுதி, த் – சந்தி, (ந்) – விகாரம், த் – இறந்தகால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி


9 இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ இருக்கிறதே ...சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே !மின்சாரம் இருக்கிறதா, இல்லையா?

மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.

1. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? – அறியா வினா

2. மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? – ஐய வினா


10. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

1. முதற்பொருள்:காடு

பெரும்பொழுது: மழைக்காலம்

சிறுபொழுது: மாலை

2. கருப்பொருள்:வரகு


11.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.

முல்லைப்பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

1. உழவர்கள் வயலில் உழுதனர்.

2. நெய்தல் பூச்செடிகளைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.


12.“நேற்று நான் பார்த்த ‘அருச்சுனன் தபசு’ என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்தேன்!” என்று சேகர் என்னிடம் கூறினான். இக்கூற்றை அயற் கூற்றாக எழுதுக.

அயற்கூற்று:

முன்தினம் அவன் பார்த்த ‘அருச்சுனன் தபசு’ என்ற கூத்தில் அழகிய ஒப்பனையையும் சிறந்த நடிப்பையும் இனிய பாடல்களையும் நுகர்ந்து மிக மகிழ்ந்ததாகச் சேகர் என்னிடம் கூறினான்.


13.பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறி இடுக.

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.


14.புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

1. வெட்சி × கரந்தை

2. வஞ்சி × காஞ்சி

3. நொச்சி × உழிஞை


15. கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!

உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

1. அடி எதுகையை எடுத்து எழுதுக.

2. இலக்கணக் குறிப்பு எழுதுக.

கொள்க, குரைக்க.

அடியெதுகை:

கொள்வோர்

உள்வாய்

இலக்கணக் குறிப்பு:

கொள்க, குரைக்க – வியங்கோள் வினைமுற்றுகள்


16.குறள் வெண்பாவின் இலக்கணத்தைக் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

குறள் வெண்பா:

வெண்பாவின் பொது இலக்கணம் அமையப்பெற்று இரண்டு அடிகளாய் வரும். முதல் அடி நான்கு சீராகவும் இரண்டாம் அடி மூன்று சீராகவும் வரும்.

எடுத்துக்காட்டு:

கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.


17.வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கலோசை ஆகும். துள்ளலோசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

வஞ்சிப்பாவிற்குத் தூங்கலோசையும், கலிப்பாவிற்குத் துள்ளல் ஓசையும் உரியன.


18. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. – இத்தொடரை இரு தொடர்களாக்குக.

நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதல் உண்டு.

நான் எழுதுவதற்கு உரிய காரணம் உண்டு.


19. தீவக அணியின் வகைகள் யாவை?

தீவக அணி மூன்று வகைப்படும். அவை:

1. முதல் நிலைத் தீவகம்

2. இடை நிலைத் தீவகம்

3. கடை நிலைத் தீவகம்.

 

20.‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ – இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

சொல்லையும் பொருளையும் வரிசைப்படி நிறுத்தி, இணைத்துப் பொருள் கொள்வது நிரல்நிறை அணி ஆகும்.


மொழியோடு விளையாடு மற்றும் மொழியை ஆள்வோம் பகுதியில் இருந்து 3-4 வினாக்கள் கேட்கப்படும்.


21.சந்தக் கவிதையில் வந்த பிழைகளைத் திருத்துக.

“தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

ஓதி யுனர்ந்தின் புருவோமே”

திருத்தம்:

தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை

தேறும் சிலப்பதி காரமதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும் – நிதம்

ஓதி யுணர்ந்தின் புறுவோமே”


22.கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.

கல்-கற்குவியல், குலை-பழக்குலை, மந்தை-ஆட்டுமந்தை, கட்டு-புற்கட்டு


23.சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க

1.எழுகதிர்- வினைத்தொகை. எழுகதிரைத் தொழு

2.கீரிபாம்பு- உம்மைத்தொகை. கீரியும் பாம்பும் சண்டையிட்டன.

3.பூங்குழல் வந்தாள்- அன்மொழித்தொகை. பூங்குழல் உடைய பெண் வந்தாள்

4.மலை வாழ்வார்- ஏழாம் வேற்றுமைத்தொகை. மலையின்கண் வாழ்வார் வந்தார்

5. முத்துப்பல்- உவமைத்தொகை. முத்துப் போன்ற பல் ஒளி வீசியது.


24.வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக.

காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடியிருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது.

காகத்திற்குக் காது உண்டு. காது கேட்கும்.

பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு(க்) குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.


25.கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க

அ) இயற்கை- செயற்கை

செயற்கையை விடுத்து இயற்கையோடு வாழ்.

ஆ) கொடு- கோடு

கோடு போட உன்னுடைய அளவுகோலைக் கொடு.

இ) கொள்- கோள்

செவ்வாய் கோளில் குடியேற உறுதிகொள்

ஈ) சிறு- சீறு

சிறுபாம்பு சீறியது

உ) தான்-தாம்

அவனை அவர்தாம் அழைத்தார் என்றுதான் கூறினேன்

ஊ) விதி- வீதி

விதியை நொந்து வீதியில் அலையாதே!


26.பழமொழிகளை நிறைவு செய்க

1.உப்பில்லாப்______________(பண்டம் குப்பையிலே)

2. ஒரு பானை _______________(சோற்றுக்கு ஒரு சோறு பதம்)

3. உப்பிட்டவரை ______________(உள்ளளவும் நினை).

4. விருந்தும் ___________(மருந்தும் மூன்று நாளைக்குத்தான்).

5.அளவுக்கு___________(மீறினால் அமிர்தமும் நஞ்சு).


27.தொகைச் சொற்களைப் பிரித்து எழுதித் தமிழ் எண்ணுரு தருக.

1. மூவேந்தர்கள்=மூன்று+வேந்தர்கள் ங

2. நாற்றிசை =நான்கு+திசை ச

3. முத்தமிழ் =மூன்று+தமிழ் ங

4. இருதிணை =இரண்டு+திணை உ

5. முப்பால் =மூன்று+பால் ங

6. ஐந்திணை =ஐந்து+திணை ரு

7. நானிலம் =நான்கு+நிலம் ச

8. அறுசுவை=ஆறு+சுவை சா

9. பத்துப்பாட்டு =பத்து+பாட்டு க0

10. எட்டுத்தொகை=எட்டு+தொகை அ


28.மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக

1.மனக்கோட்டை-தொண்டர் ஒருவர் மனக்கோட்டை கட்டினார்

2.கண்ணும் கருத்தும்-மாணவர்கள் கண்ணும் கருத்துமாய்ப் படிக்க வேண்டும்.

3.அள்ளி இறைத்தல்-தலைவர் பரப்புரையில் அள்ளி இறைத்தார்

4. ஆறப்போடுதல்-முருகன் வேலையை இரண்டு நாட்களுக்கு ஆறப்போட்டான்


29.எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக.

1. நாற்றிசையும் செல்லாத நாடில்லை: நான்கு – ச

2. எறும்புந்தன் கையால் எண்சாண்: எட்டு – அ

3. ஐந்துசால்பு ஊன்றிய தூண்: ஐந்து- ரு

4. நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி: நான்கு, இரண்டு- ச, உ

5. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி: ஆயிரம் – க000


30.விடுபட்ட எழுத்துக்களை நிரப்பி அந்த எழுத்துக்களை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க.

இ_கு (பறவையிடம் இருப்பது)

கு_தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)

வா_ (மன்னரிடம் இருப்பது)

அ_கா (தங்கைக்கு மூத்தவள்)

ம_ (அறிவின் மறுபெயர்)

பட_ (நீரில் செல்வது)

இறகு, குருதி, வாள், அக்கா, மதி, படகு. (தி-ரு-க்-கு-ற-ள்)

நூலின் பெயர்: திருக்குறள்


31.இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக

1. சிலை- சீலை

சீலையால் சிலையைத் மறைத்திருக்கிறார்கள்.

2. தொடு-தோடு

தோடு தோளைத் தொட்டுக் கொண்டிருந்தது.

3. மடு-மாடு

மடுவில் மாடு குளித்தது. (மடு-குளம்)

4. மலை-மாலை

மாலையில் மலைமீது ஏறினார்.

5. வளி-வாளி

வளி வாளியை அசைத்தது

6. விடு-வீடு

வீட்டை விற்று விடு


32.குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக

குறிப்பு: எதிர்மறையான சொற்கள்

1. மீளாத் துயர்- மீண்ட துயர்

2. கொடுத்துச் சிவந்த- கொடாது சிவந்த

3. மறைத்துக் காட்டு- மறையாது காட்டு

4. அருகில் அமர்க- தொலைவில் அமர்க

5. பெரியவரின் அமைதி- பெரியவரின் கூச்சல்

6. புயலுக்கு பின்- புயலுக்கு முன்.


33.ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக

1. புதுக்கோட்டை- புதுகை

2. திருச்சிராப்பள்ளி- திருச்சி

3. உதகமண்டலம் -உதகை

4. கோயம்புத்தூர் -கோவை

5. நாகப்பட்டினம்- நாகை

6. புதுச்சேரி -புதுவை

7. கும்பகோணம் -குடந்தை

8. திருநெல்வேலி -நெல்லை

9. மன்னார்குடி-மன்னை

10. மைலாப்பூர் -மயிலை

11. சைதாப்பேட்டை- சைதை


34.தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக

1. வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.

2. அனைவரின் பாராட்டுக்களால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது

3. வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசுமையான புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது

5. வெயிலில் அலையாதே; உடல் கருக்கும்


35.பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக

(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து).

1. விரட்டாதீர்கள்- பறவைக்கு மரம் வீடு. வெட்டாதீர்கள் -மனிதருக்கு அவை தரும் மரவீடு.

2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும். சோலைப்பூவினில் வண்டினம் கவிழும்.

3. மலைமுகட்டில் மேகம் தங்கும்- அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.

4. வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும்-இதைத் தத்துவமாய்த் தோற்பாவைக்கூத்து சொல்லும்.

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது. அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.


36.தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1) நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருட்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்.

2) காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது.

3)காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலை ஆக்குகிறது

4) பசுமையான காட்சியைக் காணுதல் கண்ணுக்கு நல்லது.

5)பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது


37.புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க

தார்போன்ற நிறமுண்டு கரியும் இல்லை

பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமும் இல்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியும் இல்லை

சோர்ந்து போகாமல் வீடு அமைப்பேன் பொறியாளரும் இல்லை

வீட்டுக்கு வரும் முன்னே, வருவதை கூறுவேன்.

நான் யார்?

விடை: காகம்


38.தொடரைப் படித்து விடையைக் கண்டறிக

1)நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ________(கற்றல்)

2)விதைக்கு தேவை எரு எனில், கதைக்குத் தேவை_______(கரு)

3)கல் சிலை ஆகுமெனில், நெல் ______ஆகும். ( சோறு)

4)குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ______( எழுத்து)

5)மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது_______(பூவில்)


39.நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்து எழுதுக.

1)கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.

தலைப்பு: காற்றின் பாடல்


2)புவி சிலிர்த்து, மண்ணில் இருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாக பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

தலைப்பு: மொட்டின் வருகை


3) சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூ வாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

தலைப்பு: மிதக்கும் வாசம்


4)இரவின் இருள் அமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும். கசகசத்த உயிரினங்கள்.

தலைப்பு: உயிர்ப்பின் ஏக்கம்


5)நின்றுவிட்ட மழை தரும் குளிர். சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர் பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

தலைப்பு: நீரின் சிலிர்ப்பு


6)குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக் காற்றின் ஆலோலம்.

தலைப்பு: வனத்தின் நடனம்


40.வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக

1)கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்

கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறவரை அழைத்து வாருங்கள்


2)ஊட்டமிகு உணவு உண்டார். அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.


3) நேற்று என்னைச் சந்தித்தார். அவர் என் நண்பர்.

நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.


4)பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தார். போட்டித் தேர்வில் வென்றார்.

பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார்.


41.தொடர்களில் உள்ள வண்ணச் சொற்களுக்குப் பதிலாக அதே பொருளுடைய வேறு சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை மீள எழுதுக.

1.உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

ஞாலத்தில் வாழும் மாந்தரில் சிலர் பழமிருக்கக் காய் உண்ணுதலைப் போல இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.


2. வள்ளல் குமணன் வறுமையால் வாடி வந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

வள்ளல் குமணன் இன்மையால் வாடி வந்த கவிஞனுக்குத் தனது தலையைக் அளித்து மங்கா சிறப்பு பெற்றான்.


3. நளனும் அவனது துணைவியும் நிடத நாட்டுக்கு வந்ததைக்கண்டு அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்.

நளனும் அவனது மனைவியும் நிடத நாட்டுக்கு வந்ததைக்கண்டு அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சி கொண்டனர்.


4.சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

பூந்தோட்டத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனுண்டன.


5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

ஆபோல் சாந்தமும் வேங்கை போல் ஆற்றலும் வேழம் போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.


42.சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(தேன், விளக்கு, மழை, விண், மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ) எ.கா. பூமணி

மணிமேகலை, பொன்விலங்கு, தேன்மழை, செய்தேன், செய்விளக்கு, பூந்தேன், பூமழை, பொன்விளக்கு, பொன்மழை, பொன்மணி, வான்மழை, செய்மணி, செய்வான்.


43.குறிப்புகளைக் கொண்டு வினாவிலேயே விடை இருப்பது போன்று வினாத்தொடர்கள் அமைக்க

(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)

எ.கா. குறளின்பத்தில் திளைக்காத புலவர் உண்டா?

1. சுவைக்காத இளநீர் உண்டா?

2.காப்பியச் சுவை அறியாதார் உண்டா?

3. மனிதகுல மேன்மை எது?

4. விடுமுறைநாள் எப்போது?


44.சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

1. இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்; நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

நறுமணம்


2. பழமைக்கு எதிரானது- எழுதுகோலில் பயன்படும்.

புதுமை


3. இருக்கும்பொழுது உருவமில்லை- இல்லாமல் உயிரினம் இல்லை.

காற்று


4. நாலெழுத்தில் கண் சிமிட்டும்- கடையிரண்டில் நீந்திச் செல்லும்

விண்மீன்


5. ஓரெழுத்தில் சோலை- இரண்டு எழுத்தில் வனம்.

காடு


45.தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக

எ.கா. அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.

(தனிச் சொற்றொடர்களை கலவைச் சொற்றொடர்களாக மாற்றுக)

அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.


இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்ககங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.

(தொடர் சொற்றொடராக மாற்றுக)

இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி அடுக்ககங்களில் அடுக்கி வைத்துக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்.


ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்து கொண்டு, கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.

(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)

ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசு போலக் கட்டிக்கொள்வர். காலில் சலங்கை அணிந்து கொள்வர். கையில் ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஆடுவர்.


கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

(கலவைச் சொற்றொடராக மாற்றுக)

கூத்துக்கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.


ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.

(தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)

ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.


46.

பாடல்

பாடறியேன் படிப்பறியேன் -நான்தான்

பள்ளிக்கூடம் தானறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன்- நான்தான்

எழுத்துவகை தானறியேன்

படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா-நான்தான்

பங்காளிய ஏன் தேடுறேன்

எழுத நல்லா தெரிஞ்சிருந்தா- நான் தான்

எதிராளிய ஏன் தேடுறேன்.

நாலெழுத்து படிச்சிருந்தா- நான்தான்

நாலு தேசம் போய் வருவேன்

நாலு பக்கம் வரப்புக்குள்ளே தெனமும்

நான் பாடுறேன் தெம்மாங்கு தான்.

பாடல் எழுந்த சூழல்

படிக்காத ஒருவன் படிப்பின் அருமை உணர்ந்து வயலில் பாடுகிறான்.


47.மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க.

வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்

பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!

பூச்சியைக் கவரும் வண்ணங்களில்

பூக்களிடம் விழுவது மனிதர்களே!

மாலையில் மாலை சூடும் மங்கையரே

மலர்தூவி இறை தொழுவீரே!


48.பின்வரும் தொடர்களை கொண்டு பொருத்தமான தொடரமைக்க

வரப் போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்.

எ.கா.

இன்னும் சிறிது நேரத்தில் வரப்போகிறேன்.

1.நாட்டில் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறது

2.இந்தியர்களுக்கு தேசப்பற்று கொஞ்சம் அதிகம்.

3.திருடன் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தான்.

4.பிறர் செய்த தீங்கை மறக்க நினைக்கிறேன்.


49.சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக

1. கானடை

கான் அடை-காட்டைச் சேர்

கான்+நடை-காட்டுக்கு நடத்தல்

கால் +நடை-காலால் நடத்தல்


2. வருந்தாமரை

வரும்+தாமரை-வருகின்ற தாமரைமலர்

வருந்தா மரை-வருந்தாத மான்

வரும் தா மரை-வருகின்ற தாவுகின்ற மான்


3. பிண்ணாக்கு-

எண்ணெய் எடுத்த கழிவு

பிள்+நாக்கு-பிளவுபட்ட நாக்கு


4. பலகையொலி

பலகை ஒலி-பலகையின் ஓசை

பல கையொலி-பலருடைய கை ஓசை

பல கை ஒலி-பல்வேறு சிறிய ஓசைகள்


50.

பகுபத உறுப்பிலக்கணம் – 2 மதிப்பெண்

பொறித்த- பொறி+த்+த்+அ

பொறி- பகுதி

த்- சந்தி

த்-இறந்த கால இடைநிலை

அ- பெயரெச்ச விகுதி


கிளர்ந்த- கிளர்+த்(ந்)+த்+அ

கிளர்- பகுதி

த்-சந்தி

ந்- விகாரம்

த்- இறந்த கால இடைநிலை

அ- பெயரெச்ச விகுதி


உரைத்த- உரை+த்+த்+அ

உரை- பகுதி

த்-சந்தி

த்-இறந்த கால இடைநிலை

அ- பெயரெச்ச விகுதி


வருக- வா(வரு)+ க

வா- பகுதி

வரு- விகாரம்

க- வியங்கோள் வினைமுற்று விகுதி


மலைந்து- மலை- த்(ந்)+த்+உ

மலை- பகுதி

த்-சந்தி

ந்- விகாரம்

த்- இறந்த கால இடைநிலை

உ- வினையெச்ச விகுதி


பொழிந்த- பொழி+த்(ந்)+த்+அ

பொழி- பகுதி

த்-சந்தி

ந்-விகாரம்

த்-இறந்த கால இடைநிலை

அ-பெயரெச்ச விகுதி


தணிந்தது- தணி+ த்(ந்)+த்+அ+து

தணி- பகுதி

த்-சந்தி

ந்- விகாரம்

த்-இறந்த கால இடைநிலை

அ- சாரியை

து- படர்க்கை வினைமுற்று விகுதி.


பதிந்து- பதி+த்(ந்)+த்+உ

பதி- பகுதி

த்-சந்தி

ந்-விகாரம்

த்-இறந்த கால இடைநிலை

உ- வினையெச்ச விகுதி


மயங்கிய-மயங்கு+இ(ன்)+ ய்+அ

மயங்கு- பகுதி

இ(ன்)- இறந்தகால இடைநிலை

ன்- விகாரம்(புணர்ந்து கெட்டது)

ய்- உடம்படுமெய் சந்தி

அ-பெயரெச்ச விகுதி


அறியேன்- அறி+ய்+(ஆ)+ஏன்

அறி- பகுதி

ய்- உடம்படுமெய் சந்தி

ஏன்- தன்மை ஒருமை வினைமுற்று விகுதி


ஒலித்து- ஒலி+த்+த்+உ

ஒலி- பகுதி

த்-சந்தி

த்-இறந்த கால இடைநிலை

உ- வினையெச்ச விகுதி