சிறப்புடைய இடுகை

இரண்டு மதிப்பெண் வினாக்கள்(34) (செய்யுள், உரைநடை)

இரண்டு மதிப்பெண் வினாக்கள் (செய்யுள், உரைநடை) வினா எண் 17-20 வரை

1.“மன்னும் சிலம்பே மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங்கப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

1. சீவக சிந்தாமணி

2. வளையாபதி

3. குண்டலகேசி


2.ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன

ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன

-மேற்கண்ட தொடர்களில் சரியான தொடர்களைச் சுட்டிக்காட்டி, எஞ்சிய பிழையான தொடரிலுள்ள பிழைக்கான காரணத்தை எழுதுக.

சரியான தொடர்கள்:

1.ஒரு தாற்றில் பல சீப்பு வாழைப்பழங்கள் உள்ளன.

2.ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.

பிழையான தொடர்:

• ஒரு சீப்பில் பல தாறு வாழைப்பழங்கள் உள்ளன.

பிழைக்கான காரணம்:

• தாற்றில் தான் சீப்புகள் இருக்கும்.


3. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.

அடடே, காலையிலேயே மாலை வந்துவிட்டதே”


4. “நமக்கு உயிர் காற்று

காற்றுக்கு வரம் மரம் – மரங்களை

வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்”

இது போன்ற உலகக் காற்றுநாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழுக்கத் தொடர்களை எழுதுக.

1. மரம் தரும் காற்று - வரம்

2. காற்று - உயிர்வாழப் போற்று


5. வசன கவிதை – குறிப்பு வரைக.

வசன கவிதை

1.உரைநடையும் கவிதையும் இணைந்த வடிவம்

2. பாரதியார் அறிமுகப்படுத்தினார்.

 

6. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதமாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.

1.அழாதே! அழாதே!

2.தின்பண்டம் வாங்கி வருவார்கள்.

3. பொம்மை வாங்கி வருவார்கள்.

4. அழாதே! அழாதே!

 

7.மாஅல் – பொருளும் இலக்கண குறிப்பும் தருக.

1.பொருள்: திருமால்.

2.இலக்கணக்குறிப்பு: செய்யுளிசை அளபெடை




8. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.

1. வாங்க வாங்க

2. உட்காருங்கள்

3. நீர் பருகுங்கள்.

4. மகிழ்ச்சி!

 

9. ‘தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டுக் குற்றி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி’ என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.

1.இல்லை

2.செல்வத்தைவிட, அன்பும் இனிய சொற்களும் இன்றியமையாதவை.

 

10. முல்லை நிலத்தில் இருந்தும் மருத நிலத்தில் இருந்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள் யாவை?

1. முல்லை நில உணவுப் பொருட்கள்:

பால், தயிர், நெய், தினை

2. மருத நில உணவுப்பொருட்கள்:

அரிசி, மா, பலா, வாழை.


11.‘இறடிப் பொம்மல் பெறுகுவிர்’ – இத்தொடர் உணர்த்தும் பொருள் எழுதுக.

தினைச்சோற்றைப் பெறுவீர்கள்


12.நச்சப்படாதவன்’ செல்வம் – இத்தொடரில் அண்ணமிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

நச்சப்படாதவன்– விரும்பப்படாதவன்.

 

13.கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். – இத்திருக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

கொடுப்பதூஉம்,துய்ப்பதூஉம்– இன்னிசை அளபெடை


14.பொருளுக்கேற்ற அடியைப் பொருத்துக.

1. உயிரை விடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும் – உயிரினும் ஓம்பப் படும்.

2. ஊரின் நடுவில் நச்சு மரம் பழுத்தது போன்று – நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று.

3. ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர் – ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.

 

15.எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப் பொருந்தும் வாய்ப்பாடு எது?

கூவிளம் தேமா மலர்


16.வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா: செயற்கை நுண்ணறிவு இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

1. கற்பிக்கும் ரோபோ

2. மருத்துவ ரோபோ


17.மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

1.மருத்துவரை நோயாளி நம்புவார்.

2.அது நோயைக் குணமாக்கும்.

 

18. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவை எனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

1.காற்று – வானம் தோன்றியது.

2.நெருப்பு – பூமி உருவானது.

3.மழை – வெள்ளத்தால், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் உருவானது.

 

19.தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

1.பிரெஞ்சு மொழி.

2.காரணம்: மொழிபெயர்ப்பு செய்ய விரும்புகிறேன்.

 

20. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுதுணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த கேண்மையினால் இடைக்காட்டு புலவன் தென்சொல்” – இவ்வடிகளில் கழிந்த பெரும்கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

1. கழிந்த பெரும் கேள்வியினான் – மன்னன் குசேல பாண்டியன்

2. காதல் மிகு கேண்மையினான் – புலவர் இடைக்காடனார்



21. செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத்தொடர்களாக்குக.

அருளைப் பெருக்கு!

அறிவைத் திருத்து !!

மயக்கம் அகற்று !!!

 

22. சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித் தண்டுகள் – இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

1.தண்டு மலரைத் தாங்குகிறது

2.பெண்மை உலகைத் தாங்குகிறது.

 

23.உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’

காலதூதர் கையில் ‘உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

1.பொய்யான வாழ்வு இறங்குவதற்குத் தொடங்கிவிட்டது.

2.காலதூதர் கையில் படுத்து உறங்குவாய்


24. கரப்பிடும்பை இல்லார்’ இத்தொடரின் பொருள் கூறுக.

பொருளை மறைத்து வைக்காதவர்.


25.தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

1. தஞ்/சம் – நேர் நேர் – தேமா

2. எளி/யர் – நிரை நேர் – புளிமா

3. பகைக்/கு – (நிரை நேர்) – நிரைபு – பிறப்பு

26.வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

ஏளனம் செய்யாமல் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கும்.


27. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

1.உழைத்ததால் கிடைத்த ஊதியம்

2.அது பகைவரை வெல்லும் ஆயுதமாகும்


28. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.


29. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் நிலைக்க விரும்பிக் கல்லில் செதுக்கினார்கள்.


30. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் – சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

1. பாசவர் – வெற்றிலை விற்பவர்

2.வாசவர் – நறுமணப்பொருள்கள் விற்பவர்

3.பல்நிண விலைஞர் – இறைச்சி விற்பவர்

4. உமணர் – உப்பு விற்பவர்


31. குறிப்பு வரைக. – அவையம்

அவையம்:

1. அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

2. துலாக்கோல் போல நடுநிலை மிக்கது.


32.காலக்கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?

1. வாளித் தண்ணீர்,

2. சாயக்குவளை,

3. கந்தைத் துணி,

4. கட்டைத்தூரிகை கொண்டு

5. சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார்


33.“காய் மணி ஆகும் முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்”–உவமை உணர்த்தும் கருத்து யாது?

மழையின்றி வாடிய பயிர் போல, கருணையன் தன் தாயை இழந்து வாடுகின்றான்.


34.வாழ்வில் தலைக்கனம், ‘தலைக்கனமே வாழ்வு’ என்று நாகூர் ரூமி யாருடைய வாழ்வைக் குறித்துக் கூறுகிறார்?

1. வாழ்வில் தலைக்கனம்:

பணம், பதவிகளால் தலைக்கனம் பிடித்தவர்

2. தலைக்கனமே வாழ்வு:

அடுத்த வேளை உணவுக்காகத் தலையில் சுமக்கும் சுமை.