சிறப்புடைய இடுகை

இயல் 7 மெல்லக் கற்போர்

  

சிற்றகல் ஒளி

 2 மதிப்பெண்

1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

  1. பழைய புத்தகங்கள் வாங்குவது வழக்கம்.
  2. புத்தகம் வாங்கிவிட்டு பலமுறை பட்டினி கிடந்துள்ளார். 
2. பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறி இடுக.

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.

விடை:

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.

3 மதிப்பெண்

"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

  1. இடம்: ம.பொ.சி. அவர்களின் 'எனது போராட்டம்' என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
  2. விளக்கம்:  நீதிபதி வாஞ்சு ஆணையத்தின் பரிந்துரையை எதிர்த்து, ம.பொ.சி. சென்னை நகராட்சியில் சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார்.

8 மதிப்பெண்

நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்

இங்கே கூடியிருக்கும் ஆன்றோர்களே! தமிழ்ச் சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.  இளமைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வும் நாட்டுப்பற்றும் ஊட்டப்பட வேண்டும்.

நாட்டு விழாக்கள்

உயர்ந்த இலட்சியங்களான சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் பேணவும், தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணவும் நாம் நாட்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றோம். 

விடுதலைப் போராட்ட வரலாறு

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப்போல, உள்நாட்டில் எழுந்த உட்பூசல்களில் தலையிட்டு, வரிவசூல் செய்யும் அதிகாரத்தையும், பின்னர் படிப்படியாக ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் பிரிட்டிஷார் பெற்றனர்.  

ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் படித்த இந்தியர்கள் படிப்படியாக அரசியல் சமத்துவம் வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். மவுண்ட்பேட்டன் திட்டப்படி சுதந்திர இந்தியா உருவானது.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு

இன்றைய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் தூண்கள். அவர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் சமூகத்தொண்டு புரிபவர்களாகவும் மலர வேண்டும். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து இளமைப் பருவத்திலேயே சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, பசுமைப்படை, செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுச்சூழல் மன்றம், சாலைப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றில் சேர்ந்து பல்வகைத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

தேசியச் சின்னங்களை மதிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்க வேண்டும். மூத்தோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுமை, சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்ற தாயைப்போல பிறந்த பொன்னாட்டைப் பேணிக்காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை என்று கூறி, பேச வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

ஏர்புதிதா?

 3 மதிப்பெண்

முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு. ப. ராஜகோபாலன் கவிபாடுகிறார்?

ஏர் புதிதா?

  1. முதல் மழை விழுந்ததும் மேல்மண் பதம் ஆகிறது; வெள்ளி முளைக்கிறது; கிழக்கு வெளுக்கிறது. 
  2. காளைகளை விரைந்து ஓட்டிக் கழனி செல்கின்றனர். பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்ல வேளையில் கொழுவை நாட்டுகின்றனர்.  
  3. மாட்டைப் பூட்டிக் காட்டைக் கீறுகின்றனர். அவர்களின் ஏரும் காரும் புதிதன்று; நாளும் நட்சத்திரமும் புதிது; ஊக்கமும் உரமும் புதிது. 
  4. மாட்டைத் தூண்டி, கொழுவை அமிழ்த்துகின்றனர். மண் புரளுகிறது; மழை பொழிகிறது; நிலம் சிலிர்க்கிறது; நாற்று நிமிர்கிறது; எல்லைத் தெய்வம் காவல் காக்கிறது.

மெய்க்கீர்த்தி 

 2 மதிப்பெண்

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள். அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.

3 மதிப்பெண்

பின்வரும் பத்தியைப் படித்து மையக் கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவான இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்துத் தொடக்கத்தில் அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் பழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிசப் பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன.  எனினும், இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது.  இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்தி கோளின் வமிச பரம்பரை மிகவும் விரித்துக் கூறியுள்ளன

மையக் கருத்து

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சி ஆண்டு, போர் வெற்றிகள், வரலாறு, வாழ்த்து, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவை காணப்படும்.  முதல் இராஜராஜனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதில் சோழ வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. பின்னர் வந்த மெய்க்கீர்த்திகள் அவற்றை விரித்துக் கூறுகின்றன.

8 மதிப்பெண்

பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலில் நயத்தை விளக்குக.

நாட்டு வளமும் ஆட்சிச் சிறப்பும்


ஒன்றின் இருப்பால் மற்றொன்று இல்லை என்னும்படியாக, மெய்கீர்த்திப் பாடல் பின்வரும் கருத்துக்களை விளக்குகிறது.

1. யானைகள் மட்டுமே பிணிக்கப்படுகின்றன. மக்கள் பிணிக்கப்படுவதில்லை. 

2. கால்சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை. 

3. ஓடைகள் மட்டுமே கலங்குகின்றன. மக்கள் கலங்குவதில்லை. 

4. ஆற்றுநீரே அடைக்கப்படுகின்றது. மக்கள் சிறையில் அடைக்கப் படுவதில்லை. 

5. மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன. மக்கள் வடுப்படுவதில்லை. 

6. மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன. மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது இல்லை.

7. காடுகள் மட்டுமே கொடிகளை உடையனவாய் உள்ளன. மக்களில் கொடியவர் எவரும் இல்லை.

8. வண்டுகள் மட்டுமே கள் உண்கின்றன. மக்கள் கள் உண்பதில்லை. 

9. மலை மூங்கில்களில் மட்டுமே வெறுமை உள்ளது. மக்களிடம் வறுமை இல்லை.

10. வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன. நாட்டில் போர் இல்லை. 

11. மலைகளில் மட்டுமே இருள் சூழ்ந்து இருக்கின்றது. மக்களிடம் வெறுமை இல்லை 

12. இளம் மான்களின் கண்கள் மட்டுமே மருள்கின்றன. மக்கள் மருள்வதில்லை. 

13. குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து செல்கின்றன. மக்கள் நெறிதவறி நடப்பதில்லை.

14. செவிலித்தாயரே சினம் காட்டுவர். வேறு யாரும் சினம் கொள்வதில்லை. 

15. புலவர் பாட்டில் மட்டுமே பொருள் மறைந்து இருக்கும். மக்கள் யாரும் பொருளை மறைத்து வைப்பதில்லை.

16. இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப் பாடுவர். தேவையற்று வேறு யாரும் ஆடிப் பாடுவதில்லை. இராசராசன் நாட்டின் இயல்பு இது.

சிலப்பதிகாரம் 

 2 மதிப்பெண்

பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  1. பாசவர் - வெற்றிலை விற்பவர் 
  2. வாசவர் - ஏலம் முதலான நறுமணப்பொருள்கள் விற்பவர்
  3. பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர் 
  4. உமணர் - வெண்மையான உப்பு விற்பவர்

3 மதிப்பெண்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்;

 பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

 தூசும் துகிரும் ஆரமும் அகிலும்" 

அ). இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

பகர்வனர் 

பட்டினும் 

தூசும்

துகிரும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

பகர்வனர் 

நகர வீதியும்

ஈ). காருகர் - பொருள் தருக.

காருகர் - நெய்பவர்

உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

சந்தனம், அகில்.

5 மதிப்பெண்

​‎சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.




மங்கையராய்ப் பிறப்பதற்கே

 8 மதிப்பெண்

நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம் - பள்ளிக் கலையரங்கம். நாள்: 08-03-2021

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் - தலைமை ஆசிரியரின் வரவேற்பு - இதழாளர் கலையரசியின் சிறப்புரை - ஆசிரியர்களின் வாழ்த்துரை - மாணவர் தலைவரின் நன்றியுரை.


மகளிர் நாள் விழா - அறிக்கை

இடம் - பள்ளிக் கலையரங்கம். நாள்: 08-03-2021

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல்

மார்ச் 8, 2021 ஆம் ஆண்டு, மாலை 4 மணி அளவில் சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக் கலையரங்கத்தில் மகளிர் நாள் விழாக் கொண்டாட்டத்திற்காகப் பள்ளி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் வரிசையாக அணிவகுத்து வந்தனர். ஆசிரியர்கள், அவர்களை ஒழுங்கு முறையில் அமர வைத்தனர். தலைமையாசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர் கலையரசி ஆகியோர் விழா மேடையில் தோன்றினர்.

தலைமையாசிரியரின் வரவேற்பு

விழா, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. தலைமையாசிரியர், மகளிர்தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கத்தைப் பற்றிக் கூறி, விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர் கலையரசியின் இதழ்ப்பணி குறித்தும், பெண்கள் முன்னேற்றப் பணிகள் குறித்தும் எடுத்துக்கூறி, அவரை அறிமுகப்படுத்தினார். மாணவர்களின் கரவொலி முழங்க, இதழாளர் கலையரசிக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை

'திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம்' எனத் தொடங்கி பெண்களின் மென்மைக் குணங்கள், குடும்ப நலன் காக்கும் பெண்ணியம், பெண்களின் மன உறுதி, சாதனை படைத்த பெண்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தீர்வுகளும் ஆகிய தலைப்புகளில் ஆழமான கருத்துகளை விதைத்தார். அவருடைய கனிவான, கருத்துச் செறிவான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. 

"பெண்ணே நீ உனக்கென

வாழ்வது எப்போது?

உண்மையான மாற்றம் வரும்

அப்போது" 

என்று கூறி, உரையை நிறைவு செய்தார்.

ஆசிரியர்களின் வாழ்த்துரை

பலத்த கரவொலிகளுக்கிடையே தமிழாசிரியர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க மேடையில் தோன்றினார். 'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற கவிமணியின் பாடலுடன் தொடங்கி மாணவக் கண்மணிகளை வாழ்த்திப் பேசினார். அவரைத் தொடர்ந்து சமூக அறிவியல் ஆசிரியர், இன்றைய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்கூறி, அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிந்தார். மாணவச் செல்வங்கள் வரலாற்றில் தடம் பதிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெற்றார். 

மாணவர் தலைவரின் நன்றியுரை

இந்த நாளை இனிய பொன்னாளாக மாற்றிக் கொடுத்த தலைமை ஆசிரியர், சிறப்பு விருந்தினர், ஆசிரியர்ப் பெருமக்கள், மாணவக் கண்மணிகள் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு ஆகியோருக்கு மாணவர் தலைவர் நன்றி தெரிவித்துப் பேசினார். நாட்டுப்பண் இசைக்க, விழா இனிதே நிறைவுற்றது.

புறப்பொருள் இலக்கணம் 

2 மதிப்பெண்

புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
  1. வெட்சி × கரந்தை 
  2. வஞ்சி × காஞ்சி 
  3. நொச்சி × உழிஞை

3 மதிப்பெண்

அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

  1. அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான் - இது வஞ்சித் திணை ஆகும்.
  2. வஞ்சித் திணை: மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி, வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வது வஞ்சித் திணை ஆகும்.







இயல் 8 மெல்லக்கற்போர்

 

 சங்க இலக்கியத்தில் அறம்

 2 மதிப்பெண் 

1). குறிப்பு வரைக. - அவையம்

அவையம்:

  1. இவை அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. 
  2. இது துலாக்கோல் போல அறநெறிப்படி நீதி வழங்கியது.

3 மதிப்பெண்

1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

இன்றைக்கும் தேவையான அறங்கள்

  1. செங்கோல் ஆட்சி வேண்டும் 
  2. அறநெறிப்படி நீதி வேண்டும்.
  3. போர் அறம் வேண்டும் 
  4. கொடை அறம் வேண்டும் 
  5. உதவி அறம் வேண்டும் 
  6. வாய்மை அறம் வேண்டும் 

2. சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு : சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

சுற்றுச்சூழலை பேணுவதே இன்றைய அறம்

வணக்கம்.

  1. பூமியைக் காப்பது நமது கடமை.  
  2. தொழிற்சாலைக் கழிவுகள், வாகனப்புகை - சூழல் மாசுபாடு 
  3. வெப்பமயமாதல்-  பனிமலைகள் உருகுதல்- பருவகால மாற்றம் 
  4. சுற்றுச்சூழல் சட்டங்கள்-மக்கள் ஒத்துழைப்பு தேவை. 
  5. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை தேவை.
  6. பசுமையான உலகம் படைப்போம்.

  நன்றி!

காலக்கணிதம்

காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்

இவை சரி என்றால் இயம்புவது என் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யாருமே அறிந்தவை; அறிக!

- கண்ணதாசன்.

பாநயம் பாராட்டல்

காலக்கணிதம்

திரண்ட கருத்து

1) நான் ஒரு கவிஞன்.

2) காலத்தைக் கணிப்பேன்.

3) கவிதை படைப்பேன்.

4) நானே தெய்வம்.

5) என்கவிதைகள் விலை மிகுந்தவை.

6) முத்தொழில் புரிகிறேன்

சொல் நயம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்- சொல்நயம்

பொருள் நயம்

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்- பொருள் நயம்

சந்த நயம்

சந்தநயம் வந்துள்ளது.

மோனை நயம்

கவிஞன்

கணிதம்

எதுகை நயம்

கருப்படு

பொருளை

முரண் நயம்

ஆக்கல் ×அழித்தல்

சரி×தவறு

இயைபு நயம்

கணிதம்

தெய்வம்

அணிநயம்

உருவக அணி

இயல் 8

 சங்க இலக்கியத்தில் அறம்

 2 மதிப்பெண் 

1). குறிப்பு வரைக. - அவையம்

அவையம்:

  1. அறம் கூறும் மன்றங்கள், அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன. 
  2. உறையூரில் இருந்த அவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.  
  3. மதுரைக்காஞ்சி, 'மதுரையில் இருந்த அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது' என்கிறது.

3 மதிப்பெண்

1. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

இன்றைக்கும் தேவையான அறங்கள்

  1. "இப்பிறப்பில் அறம் செய்தால் அதன் பயனை மறுபிறப்பில் பெறலாம் என்ற வணிக நோக்கம் கூடாது" 
  2. "ஆட்சியாளர், செங்கோல் போன்று நேரிய ஆட்சி மேற்கொள்ளவேண்டும். நீர்நிலை பெருக்கி, நிலவளம் கண்டு, உணவுப்பெருக்கம் காண்பதும் அதனை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதும் அரசனின் கடமை ஆகும்" 
  3.  "குற்றத்தின் அடிப்படையில் ஆராய்ந்து தண்டனை வழங்க வேண்டும்.  
  4.  "போரின் கொடுமையிலிருந்து பார்ப்பனர், பெண்டிர், நோயாளிகள், புதல்வர்களை பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும். 
  5.  "தன்னுடைய மகிழ்ச்சியை மறந்து மற்றவர் மகிழ்ச்சியை நாடுவதுதான் உண்மையான மகிழ்ச்சி. செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்போம் எனில் தப்புந பலவே. இரப்போர்க்கு ஈயாது வாழ்வதைவிட உயிரை விட்டுவிடுதல் மேலானது" 

போன்ற அறங்கள் இன்று அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியவை ஆகும்.

2. சுற்றுச்சூழலைப் பேணுவதே இன்றைய அறம்' என்ற தலைப்பில், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. (குறிப்பு : சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்)

சுற்றுச்சூழலை பேணுவதே இன்றைய அறம்

அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

  1. நாம் வாழும் பூமியை மாசுபடுத்தாமல் வைத்திருக்க வேண்டியது நமது கடமை.  
  2. பல்வேறு தொழிற்சாலைகளும் வாகனங்களும் நமது சுற்றுச்சூழலை மிகவும் மாசுபடுத்தி வருகின்றன. 
  3. வளிமண்டலத்தில் கார்பனின் அளவு அதிகரித்து 'வெப்பமயமாதல்' நிகழ்வு ஏற்படுகிறது. இதனால் பனிமலைகள் உருகுவதும், பருவகாலங்கள் மாறுவதும் அடிக்கடி நிகழ்கின்றன.
  4. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அரசு பல்வேறு சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் சுற்றுச்சூழல் விதிகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இது மிகவும் கவலைக்குரியதாகும். 
  5. முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர்.
  6. அவர்களது வாழ்க்கை நெறிகளைப் பின்பற்றி நாமும் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ வேண்டும்.
  7. பசுமையான உலகம் படைக்க ஒன்றிணைவோம், வாரீர்!

  நன்றி, வணக்கம்!

காலக்கணிதம்

காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்

இவை சரி என்றால் இயம்புவது என் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பது என் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம்மூன்றும்

அவனும் யாருமே அறிந்தவை; அறிக!

- கண்ணதாசன்.

பாநயம் பாராட்டல்

காலக்கணிதம்

திரண்ட கருத்து

1) நான் ஒரு கவிஞன்.

2) காலத்தைக் கணிப்பேன்.

3) கவிதை படைப்பேன்.

4) நானே தெய்வம்.

5) என் கவிதைகள் விலை மிகுந்தவை.

6) முத்தொழில் புரிகிறேன்

சொல் நயம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்- சொல்நயம்

பொருள் நயம்

பொன்னினும் விலைமிகு பொருள் என்செல்வம்- பொருள் நயம்

சந்த நயம்

சந்தநயம் வந்துள்ளது.

மோனை நயம்

கவிஞன்

கணிதம்

எதுகை நயம்

கருப்படு

பொருளை

முரண் நயம்

ஆக்கல் ×அழித்தல்

சரி×தவறு

இயைபு நயம்

கணிதம்

தெய்வம்

அணிநயம்

உருவக அணி

இயல் 7

 

சிற்றகல் ஒளி

 2 மதிப்பெண்

1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

  1. நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத குறையால் பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, தனக்குத் விருப்பமான புத்தகங்களை மிகமிகக் குறைந்த விலைக்கு வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
  2.  உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டு, பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார். 
2. பொருத்தமான இடங்களில் நிறுத்தற்குறி இடுக.

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.

விடை:

பழங்காலத்திலேயே பாண்டியன் ஆண்ட பெருமையைக் கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி.

3 மதிப்பெண்

"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

  1. இடம்: ம.பொ.சி. அவர்களின் 'எனது போராட்டம்' என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
  2. விளக்கம்:  நீதிபதி வாஞ்சு ஆணையம், ஆந்திரத்தின் தலைநகராகச் சென்னை இருக்க வேண்டும் என்ற இடைக்கால ஏற்பாட்டினைப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துக்கள் நிலவின. இதை எதிர்த்து ம.பொ.சி. அவர்கள் சென்னை பற்றிய தீர்மானத்தை முன்மொழிந்து, "தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கினார்.

8 மதிப்பெண்

நாட்டு விழாக்கள் - விடுதலைப் போராட்ட வரலாறு - நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் 'மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும்' என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்

இங்கே கூடியிருக்கும் ஆன்றோர்களே! தமிழ்ச் சான்றோர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை உரித்தாக்குகிறேன்.  இளமைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு ஒருமைப்பாட்டுணர்வும் நாட்டுப்பற்றும் ஊட்டப்பட வேண்டும்.

நாட்டு விழாக்கள்

உயர்ந்த இலட்சியங்களான சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் பேணவும், தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்கவும், வேற்றுமையில் ஒற்றுமை காணவும் நாம் நாட்டு விழாக்களைக் கொண்டாடி வருகின்றோம். 

விடுதலைப் போராட்ட வரலாறு

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதைப்போல, உள்நாட்டில் எழுந்த உட்பூசல்களில் தலையிட்டு, வரிவசூல் செய்யும் அதிகாரத்தையும், பின்னர் படிப்படியாக ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் பிரிட்டிஷார் பெற்றனர்.  

ஆங்கிலக் கல்வியின் தாக்கத்தால் படித்த இந்தியர்கள் படிப்படியாக அரசியல் சமத்துவம் வேண்டி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். மவுண்ட்பேட்டன் திட்டப்படி சுதந்திர இந்தியா உருவானது.

நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு

இன்றைய மாணவர்கள் எதிர்கால இந்தியாவின் தூண்கள். அவர்கள் நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் சமூகத்தொண்டு புரிபவர்களாகவும் மலர வேண்டும். 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து இளமைப் பருவத்திலேயே சாரணர் இயக்கம், தேசிய மாணவர்படை, பசுமைப்படை, செஞ்சிலுவைச் சங்கம், சுற்றுச்சூழல் மன்றம், சாலைப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றில் சேர்ந்து பல்வகைத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

தேசியச் சின்னங்களை மதிக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டைப் பேணிக் காக்க வேண்டும். மூத்தோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுமை, சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெற்ற தாயைப்போல பிறந்த பொன்னாட்டைப் பேணிக்காப்பது நமது ஒவ்வொருவரின் கடமை என்று கூறி, பேச வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

ஏர்புதிதா?

 3 மதிப்பெண்

முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாகக் கு. ப. ராஜகோபாலன் கவிபாடுகிறார்?

ஏர் புதிதா?

  1. முதல் மழை விழுந்ததும் மேல்மண் பதம் ஆகிறது; வெள்ளி முளைக்கிறது; கிழக்கு வெளுக்கிறது. 
  2. காளைகளை விரைந்து ஓட்டிக் கழனி செல்கின்றனர். பொழுதேறப் பொன்பரவும் ஏரடியில் நல்ல வேளையில் கொழுவை நாட்டுகின்றனர்.  
  3. மாட்டைப் பூட்டிக் காட்டைக் கீறுகின்றனர். அவர்களின் ஏரும் காரும் புதிதன்று; நாளும் நட்சத்திரமும் புதிது; ஊக்கமும் உரமும் புதிது. 
  4. மாட்டைத் தூண்டி, கொழுவை அமிழ்த்துகின்றனர். மண் புரளுகிறது; மழை பொழிகிறது; நிலம் சிலிர்க்கிறது; நாற்று நிமிர்கிறது; எல்லைத் தெய்வம் காவல் காக்கிறது.

மெய்க்கீர்த்தி 

 2 மதிப்பெண்

மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள். அழியாத வகையில் அதனைக் கல்லில் செதுக்கினார்கள்.

3 மதிப்பெண்

பின்வரும் பத்தியைப் படித்து மையக் கருத்தை எழுதுக.

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக் கூறுவது மெய்க்கீர்த்தி. பொதுவான இது சோழ மன்னருடைய சாசனங்களின் தொடக்கத்தில் அரசனுடைய இத்தனையாவது ஆட்சியாண்டு என்று கூறுமிடத்துத் தொடக்கத்தில் அமைக்கப்பெறும். சிறப்பாக அவனுடைய போர் வெற்றிகளையும் வரலாற்றையும் முறையாகக் கூறி, அவன் தன் தேவியோடு வீற்றிருந்து நீடு வாழ்க எனக் கூறி, பிறகே சாசனம் எழுந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடும்.

சோழ மன்னர் பரம்பரையில் மெய்க்கீர்த்தியோடு சாசனங்களைப் பொறிக்கும் பழக்கம் நெடுநாள் இருந்ததில்லை. முதல் இராசராசனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதன்கண் வமிசப் பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. ஏனைய பகுதிகள் உள்ளன.  எனினும், இது மிகவும் சுருக்கமாகவே உள்ளது.  இன்னும் பின்வந்த மெய்க்கீர்த்தி கோளின் வமிச பரம்பரை மிகவும் விரித்துக் கூறியுள்ளன

மையக் கருத்து

பேரரசனது மெய்ப்புகழை எடுத்துக்கூறுவது மெய்க்கீர்த்தி. சோழ மன்னருடைய சாசனங்களில் அரசனுடைய ஆட்சி ஆண்டு, போர் வெற்றிகள், வரலாறு, வாழ்த்து, சாசனம் எழுந்த நிகழ்ச்சி ஆகியவை காணப்படும்.  முதல் இராஜராஜனுடைய எட்டாம் ஆண்டில் தான் மெய்க்கீர்த்தி காணப்படுகிறது. இதில் சோழ வமிச பாரம்பரியம் விதந்து ஓதப்படவில்லை. பின்னர் வந்த மெய்க்கீர்த்திகள் அவற்றை விரித்துக் கூறுகின்றன.

8 மதிப்பெண்

பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலில் நயத்தை விளக்குக.

நாட்டு வளமும் ஆட்சிச் சிறப்பும்


ஒன்றின் இருப்பால் மற்றொன்று இல்லை என்னும் படியாக, மெய்கீர்த்திப் பாடல் பின்வரும் கருத்துக்களை விளக்குகிறது.

1. யானைகள் மட்டுமே பிணிக்கப்படுகின்றன. மக்கள் பிணிக்கப்படுவதில்லை. 

2. கால்சிலம்புகளே புலம்புகின்றன. மக்கள் புலம்புவதில்லை. 

3. ஓடைகள் மட்டுமே கலங்குகின்றன. மக்கள் கலங்குவதில்லை. 

4. ஆற்றுநீரே அடைக்கப்படுகின்றது. மக்கள் சிறையில் அடைக்கப் படுவதில்லை. 

5. மாங்காய்கள் மட்டுமே வடுப்படுகின்றன. மக்கள் வடுப்படுவதில்லை. 

6. மலர்கள் மட்டுமே பறிக்கப்படுகின்றன. மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவது இல்லை.

7. காடுகள் மட்டுமே கொடிகளை உடையனவாய் உள்ளன. மக்களில் கொடியவர் எவரும் இல்லை.

8. வண்டுகள் மட்டுமே கள் உண்கின்றன. மக்கள் கள் உண்பதில்லை. 

9. மலை மூங்கில்களில் மட்டுமே வெறுமை உள்ளது. மக்களிடம் வறுமை இல்லை.

10. வயலில் நெற்கதிர்கள் மட்டுமே போராக எழுகின்றன. நாட்டில் போர் இல்லை. 

11. மலைகளில் மட்டுமே இருள் சூழ்ந்து இருக்கின்றது. மக்களிடம் வெறுமை இல்லை 

12. இளம் மான்களின் கண்கள் மட்டுமே மருள்கின்றன. மக்கள் மருள்வதில்லை. 

13. குளத்து மீன்கள் மட்டுமே பிறழ்ந்து செல்கின்றன. மக்கள் நெறிதவறி நடப்பதில்லை.

14. செவிலித்தாயரே சினம் காட்டுவர். வேறு யாரும் சினம் கொள்வதில்லை. 

15. புலவர் பாட்டில் மட்டுமே பொருள் மறைந்து இருக்கும். மக்கள் யாரும் பொருளை மறைத்து வைப்பதில்லை.

16. இசைப்பாணரே தெருவில் கூடி ஆடிப் பாடுவர். தேவையற்று வேறு யாரும் ஆடிப் பாடுவதில்லை. இராசராசன் நாட்டின் இயல்பு இது.

சிலப்பதிகாரம் 

 2 மதிப்பெண்

பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள் யாவர்?

  1. பாசவர் - வெற்றிலை விற்பவர் 
  2. வாசவர் - ஏலம் முதலான நறுமணப்பொருள்கள் விற்பவர்
  3. பல்நிண விலைஞர் - பல்வகை இறைச்சி விற்பவர் 
  4. உமணர் - வெண்மையான உப்பு விற்பவர்

3 மதிப்பெண்

பகர்வனர் திரிதரு நகர வீதியும்;

 பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் 

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;

 தூசும் துகிரும் ஆரமும் அகிலும்" 

அ). இவ்வடிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

சிலப்பதிகாரம்

ஆ). பாடலில் அமைந்த மோனையை எடுத்து எழுதுக.

பகர்வனர் 

பட்டினும் 

தூசும்

துகிரும்

இ) எதுகைச் சொற்களை அடிக்கோடிடுக.

பகர்வனர் 

நகர வீதியும்

ஈ). காருகர் - பொருள் தருக.

காருகர் - நெய்பவர்

உ). இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?

சந்தனம், அகில்.

5 மதிப்பெண்

​‎சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.




மங்கையராய்ப் பிறப்பதற்கே

 8 மதிப்பெண்

நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.

மகளிர் நாள் விழா

இடம் - பள்ளிக் கலையரங்கம். நாள்: 08-03-2021

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் - தலைமை ஆசிரியரின் வரவேற்பு - இதழாளர் கலையரசியின் சிறப்புரை - ஆசிரியர்களின் வாழ்த்துரை - மாணவர் தலைவரின் நன்றியுரை.


மகளிர் நாள் விழா - அறிக்கை

இடம் - பள்ளிக் கலையரங்கம். நாள்: 08-03-2021

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல்

மார்ச் 8, 2021 ஆம் ஆண்டு, மாலை 4 மணி அளவில் சங்கரலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக் கலையரங்கத்தில் மகளிர் நாள் விழாக் கொண்டாட்டத்திற்காகப் பள்ளி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் வரிசையாக அணிவகுத்து வந்தனர். ஆசிரியர்கள், அவர்களை ஒழுங்கு முறையில் அமர வைத்தனர். தலைமையாசிரியர் மற்றும் சிறப்பு விருந்தினர் கலையரசி ஆகியோர் விழா மேடையில் தோன்றினர்.

தலைமையாசிரியரின் வரவேற்பு

விழா, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. தலைமையாசிரியர், மகளிர்தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கத்தைப் பற்றிக் கூறி, விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினர் கலையரசியின் இதழ்ப்பணி குறித்தும், பெண்கள் முன்னேற்றப் பணிகள் குறித்தும் எடுத்துக்கூறி, அவரை அறிமுகப்படுத்தினார். மாணவர்களின் கரவொலி முழங்க, இதழாளர் கலையரசிக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

இதழாளர் கலையரசியின் சிறப்புரை

'திக்கெட்டும் ஒலிக்கட்டும் பெண்ணியம்' எனத் தொடங்கி பெண்களின் மென்மைக் குணங்கள், குடும்ப நலன் காக்கும் பெண்ணியம், பெண்களின் மன உறுதி, சாதனை படைத்த பெண்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் தீர்வுகளும் ஆகிய தலைப்புகளில் ஆழமான கருத்துகளை விதைத்தார். அவருடைய கனிவான, கருத்துச் செறிவான பேச்சு அனைவரையும் கவர்ந்தது. 

"பெண்ணே நீ உனக்கென

வாழ்வது எப்போது?

உண்மையான மாற்றம் வரும்

அப்போது" 

என்று கூறி, உரையை நிறைவு செய்தார்.

ஆசிரியர்களின் வாழ்த்துரை

பலத்த கரவொலிகளுக்கிடையே தமிழாசிரியர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க மேடையில் தோன்றினார். 'மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்ற கவிமணியின் பாடலுடன் தொடங்கி மாணவக் கண்மணிகளை வாழ்த்திப் பேசினார். அவரைத் தொடர்ந்து சமூக அறிவியல் ஆசிரியர், இன்றைய சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்கூறி, அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிந்தார். மாணவச் செல்வங்கள் வரலாற்றில் தடம் பதிக்க வேண்டும் என வாழ்த்தி விடைபெற்றார். 

மாணவர் தலைவரின் நன்றியுரை

இந்த நாளை இனிய பொன்னாளாக மாற்றிக் கொடுத்த தலைமை ஆசிரியர், சிறப்பு விருந்தினர், ஆசிரியர்ப் பெருமக்கள், மாணவக் கண்மணிகள் மற்றும் விழா ஏற்பாட்டுக் குழு ஆகியோருக்கு மாணவர் தலைவர் நன்றி தெரிவித்துப் பேசினார். நாட்டுப்பண் இசைக்க, விழா இனிதே நிறைவுற்றது.

புறப்பொருள் இலக்கணம் 

2 மதிப்பெண்

புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.
  1. வெட்சி × கரந்தை 
  2. வஞ்சி × காஞ்சி 
  3. நொச்சி × உழிஞை

3 மதிப்பெண்

அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான். அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

  1. அவந்தி நாட்டு மன்னன், மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான் - இது வஞ்சித் திணை ஆகும்.
  2. வஞ்சித் திணை: மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி, வஞ்சிப் பூவைச் சூடி போருக்குச் செல்வது வஞ்சித் திணை ஆகும்.







இயல் 6

 பத்தாம் வகுப்பு மெல்லக் கற்போர் இயல் 6

பலவுள் தெரிக

1.குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்______

குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

2.கூற்று 1: போராட்ட பண்புடனே வளர்ந்தவர் கலைஞர் கூற்று ரெண்டு அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.

கூற்று 1 மற்றும் 2 சரி

3.மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

தளரப் பிணைத்தால்

4.தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான், கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது.- இத்தொடருக்கான வினா எது?

கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

5.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அங்கு வறுமை இல்லாததால்

குறுவினா

1.காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள் கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்

நிலம்-காடு (முல்லை)

பொழுது-

பெரும்பொழுது-மழைக்காலம்(கார்காலம்) 

சிறுபொழுது-மாலை

கருப்பொருள்

உணவு: வரகு

2.“கலைஞர், பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளர், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்”- பேராசிரியர் அன்பழகன். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

கலைஞர், பழுமரக்கனி பயன்கொள்ளும் பேச்சாளராகவும், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளராகவும் திகழ்ந்ததாகப் பேராசிரியர் அன்பழகன் பாராட்டியுள்ளார்.

3.உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

  1. பொய்யான வாழ்வு அழிவதைக் காண எழுந்திரு.
  2. காலனின் தூதர் கையில் உறங்கு

4.சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச் சுமக்கின்ற ஒல்லித்தண்டுகள். இக்கவிதை அடிகள் உணர்த்தும் உள்ளழகை எழுதுக.

  1. மலரைத் தாங்குவது தண்டு
  2. உலகைத் தாங்குவது அன்பு

5.கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக. 

உழவர்கள் மலையில் உழுதனர். 

முல்லை பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

உழவர்கள் வயலில் உழுதனர். 

நெய்தல் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

சிறுவினா

1.வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

  1. திருவடியில் கிண்கிணி, சிலம்பு
  2. இடையில் அரைஞாண், அரைவடம்
  3. நெற்றியில் பட்டம், சுட்டி 
  4. காதில் குண்டலம்,குழை 
  5. கொண்டையில் ஒளிமுத்து
  6. வைத்தியநாதபுரி முருகனே, செங்கீரை ஆடுக.

2.நவீன கவிதையில் வெளிப்படும் நுன்மை உள்ளம், பூத்தொடுக்கும் நாட்டுப்புறப் பாடலில் வெளிப்படுகிறது. ஒப்பிட்டு எழுதுக.

நவீன கவிதை

இறுக்கி முடிச்சிட்டால் 

காம்புகளின் கழுத்து முறியும் 

தளரப் பிணைத்தால் 

மலர்கள் தரையில் நழுவும் 

வாசலில் மரணம் நிற்பதறிந்தும் 

வருந்தாமல் சிரிக்கும் 

இந்தப் பூவை 

எப்படித் தொடுக்க நான்.

நாட்டுப்புறப் பாடல்

கையாலே பூவெடுத்தா - மாரிக்கு 

காம்பழுகிப் போகுமின்னு 

விரலாலே பூவெடுத்தா- மாரிக்கு 

வெம்பி விடுமென்று சொல்லி 

தங்கத் துரட்டி கொண்டு மாரிக்குத் 

தாங்கி மலரெடுத்தார்.

நாட்டுப்புறப் பாடலிலும் வெளிப்படும் நுண்மை உள்ளம்

  1. பூத்தொடுக்க மனமே நூலாக வேண்டும். 
  2. அதைப் போலத் தங்கத்துரட்டி கொண்டு அழுக்குப்படாமல் கவனமாக மலர் பறிக்க வேண்டும்.

3.‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’.- காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணை நிலைத்தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

  1. குறிஞ்சி: சுற்றுலா 
  2. முல்லை: பாதுகாக்கப்பட்ட காடுகள் 
  3. மருதம்: நவீன வேளாண்மை, 
  4. நெய்தல்: பலவகைத் தொழில்கள் என வளர்ச்சி அடைந்துள்ளது.

4.தமிழ் மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக.

  1. தமிழ்த்தாய் வாழ்த்து -அரசுவிழாப் பாடல்
  2. தமிழ் வளர்ச்சித்துறை உருவாக்கம்
  3. செம்மொழித்தமிழ் மாநாடு 

நெடுவினா

1.நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக

பாராட்டுரை

பொம்மலாட்டம் 

  1. காட்சிகளை மாற்றிக் கண்முன்னே நிறுத்துவது 
  2. உயிருள்ள மனிதர்கள் பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது 
  3. உள்ளுணர்வில் மாற்றத்தை ஏற்படுத்துவது

நெகிழிப் பைகளின் தீமை

  1. மகிழ்ச்சியான நிகழ்வு 
  2. பசுமையான நினைவு
  3. புதிய சிந்தனை
  4. பாரம்பரியக் கலை
  5. நெகிழிப்பை கால்வாயை அடைக்கும்
  6. வேரைத் தடுக்கும்
  7. அழியாது
  8. மலைபோல் குவிந்து உயிர்களை அழிக்கும் 
  9. நெகிழிப்பை தவிர்
  10. கலைகளை வளர்
  11. பாராட்டுகள்

2.போராட்டக் கலைஞர்- பேச்சுக் கலைஞர்- நாடகக் கலைஞர்- திரைக்கலைஞர்- இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.

பன்முகக் கலைஞர்

முன்னுரை 

  1. பகுத்தறிவுச் சிந்தனையாளர்
  2. பேச்சாளர்
  3. எழுத்தாளர்
  4. படைப்பாளர்
  5. முத்தமிழ் வித்தகர்
  6. தியாகத் திருவுருவம் 

போராட்டக் கலைஞர்

மாணவப் பருவத்திலேயே இந்தி எதிர்ப்புப் போராளி

பேச்சுக் கலைஞர் 

  1. தன்மானத்தை, 
  2. தமிழ் உணர்வை, 
  3. தமிழ் இலக்கியத்தை, 
  4. பகுத்தறிவை, 
  5. மத ஒருமைப்பாட்டை, 
  6. சமூக நல்லிணக்கத்தை ஊட்டியவர்.

நாடகக் கலைஞர்

  1. பழனியப்பன் 
  2. சாம்ராட் அசோகன், 
  3. மணிமகுடம், 
  4. வெள்ளிக்கிழமை, 
  5. காகிதப்பூ
  6. தூக்குமேடை

திரைக்கலைஞர்

  1. இராஜகுமாரி 
  2. மருதநாட்டு இளவரசி, 
  3. மந்திரிகுமாரி, 
  4. நாம், 
  5. மலைக்கள்ளன், 
  6. பராசக்தி, 
  7. திரும்பிப்பார், 
  8. ராஜாராணி, 
  9. ரங்கோன் ராதா

இயற்றமிழ்க் கலைஞர்

சிறுகதை

  1. ‘கயிற்றில் தொங்கிய கணபதி’ 
  2. நளாயினி, 
  3. சித்தார்த்தன் சிலை, 
  4. சந்தனக்கிண்ணம், 
  5. தாய்மை, 
  6. புகழேந்தி, 
  7. அணில் குஞ்சு 

புதினம் 

  1. ரோமாபுரிப் பாண்டியன், 
  2. பொன்னர் சங்கர், 
  3. தென்பாண்டிச் சிங்கம், 
  4. ஒரே ரத்தம் 

உரைநடை 

  1. குறளோவியம், 
  2. தொல்காப்பியப் பூங்கா 

வாழ்க்கை வரலாறு 

‘நெஞ்சுக்கு நீதி’

முடிவுரை 

 ‘உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’ என்னும் கூற்றுக்குச் சான்றாக வாழ்ந்தவர் கலைஞர். 

3.சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட… இவ்வுரையைத் தொடர்க!

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்

  1. ஆன்றோர்களே, 
  2. சான்றோர்களே! 
  3. வணங்குகிறேன்.

மருத நிலக் காட்சி

  1. வண்டுகள் பாட, 
  2. மயில்கள் ஆட, 
  3. மேகங்கள் மத்தளம் கொட்ட, 
  4. தாமரை விளக்குகளை ஏற்ற, 
  5. குவளை கண்விழித்துப் பார்க்க 
  6. நீரலைகள் படம்பிடிக்கின்றன. 

இராமனின் அழகுக் காட்சி

  1. இராமனின் ஒளிமிக்க மேனி
  2. மையோ? 
  3. மரகதமோ? 
  4. மறிகடலோ? 
  5. மழைமுகிலோ? இல்லை.
  6. அழியாத அழகு

குகனின் மனவோட்டம் 

  1. பரதனின் படைகண்டு அஞ்சினால், 
  2. உலகம் பழிக்கும். 

கும்பகருணனை எழுப்புதல்

  1. பொய்யான வாழ்வு அழிவதைக் காண எழுந்திரு.
  2. காலனின் தூதர் கையில் உறங்கு

வருணனையில் கம்பர் வல்லவர்.


மொழிபெயர்க்க

Kalaignar Karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions covers a wide range; poems, letters, screenplays, novels, biograpies, historical novels, stage-plays, dialogues and movie songs. Written kuralovium for thirukkural, tholkappiya poonga, poompukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture.. Like the kuralovium in which kalaignar Wrote about thirukural, through the construction of valluvar kottam he have an architectural presence to thiruvalluvar, in Chennai. At kanyakumari, karunanidhi constructed a 133-foot-high statue of thiruvalluvar in honour of the scholar. 

கலைஞர் கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்குத் தனது பங்களிப்பிற்காக அறியப்பட்டவர். அவரது பங்களிப்புகள் பரந்த அளவிலானவை; அவை கவிதைகள், கடிதங்கள், திரைக்கதைகள், நாவல்கள், சுயசரிதைகள், வரலாற்று நாவல்கள், மேடைநாடகங்கள், உரையாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள் ஆகியனவாகும். குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, பூம்புகார் முதலிய நூல்களையும் மற்றும் பல கவிதைநூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இலக்கியம் மட்டுமின்றிக் கலை, கட்டிடக்கலை மூலமும் தமிழ்மொழிக்குக் கருணாநிதி பங்களித்துள்ளார். திருவள்ளுவருக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை நிறுவியுள்ளார். கன்னியாகுமரியில் 133 அடி உயரமுடைய திருவள்ளுவர் சிலையைக் கருணாநிதி நிர்மாணித்துள்ளார்.

தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக. 

1.அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார்.(தனிச்சொற்றொடர்களை கலவைச் சொற்றொடராக மாற்றுக)

அழைப்பு மணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.

2.இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்ககங்களில் அடுக்கி வைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார் (தொடர் சொற்றொடராக மாற்றுக)

இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார்; அடுக்கி வைத்தார்; எடுத்துக் கொடுத்தார்.

3.கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்தார். கலைஞர் எழுத்து வழியாக தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)

கலைஞர் எழுத்தைத் தமது ஆயுதமாகக் கொண்டு வாழ்ந்து, தமது எண்ணங்களைக் கடைக்கோடித் தமிழனுக்கும் கொண்டு சென்றார்.

4.முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கி வார இதழாக்கி, நாளேடாக்கினார் கலைஞர். (தனிச்சொற்றொடர்களாக மாற்றுக)

கலைஞர் முரசொலி ஏட்டைக் கையெழுத்து இதழாகத் தொடங்கினார். பின்னர் அதனை வார இதழாக்கினார். பின்னர் அதனை நாளேடாக்கினார்

5.ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக)

ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அதனால், அறையில் உள்ளவர்களின் பேச்சு தடைப்பட்டது.

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக

1.வானம் கருக்கத் தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது. 

2.அனைவரின் பாராட்டுக்களால், வெட்கத்தில் பாடகரின் முகம் சிவந்தது 

3.வெள்ளை மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

4.கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் பசுமையான புல்வெளிகளில் கதிரவனின் மஞ்சள் வெயில் பரவிக்கிடக்கிறது 

5.வெயிலில் அலையாதே; உடல் கருக்கும் 

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக 

(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து).

1.விரட்டாதீர்கள்- பறவைக்கு மரம் வீடு. வெட்டாதீர்கள் -மனிதருக்கு அவை தரும் மரவீடு.

2.காலை ஒளியினில் மலரிதழ் அவிழும். சோலைப்பூவினில் வண்டினம் கவிழும்.

3.மலைமுகட்டில் மேகம் தங்கும்- அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.

4.வாழ்க்கையில் தோற்பவை மீண்டும் வெல்லும்-இதைத் தத்துவமாய்த் தோற்பாவைக்கூத்து சொல்லும்.

5.தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது.- அதில் வரும் காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து.

அகராதியில் காண்க

  1. தால்- நாக்கு
  2. அகவுதல்- அழைத்தல், ஒலித்தல், பாடுதல்
  3. அணிமை- அண்மை, அருகு, பக்கம்
  4. உழுவை- புலி 
  5. ஏந்தொழில்- மிகுந்த அழகு

கலைச்சொல் அறிவோம் 

  1. Playwrite -நாடக ஆசிரியர்
  2. storyteller -கதை சொல்லி 
  3. screenplay -திரைக்கதை
  4. asthetics-அழகியல், முருகியல்

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி எழுதுக

பிறமொழிச் சொல் -தமிழ்ச்சொல்

  1. கோல்ட் பிஸ்கட்- தங்கக் கட்டி 
  2. யூஸ் பண்ணி- பயன்படுத்தி 
  3. ஈக்வலாக- சமமாக 
  4. வெயிட்- எடை 
  5. பட்- ஆனால் 
  6. எக்ஸ்பெரிமெண்ட் -பரிசோதனை 
  7. ரிப்பீட்- மீண்டும் 
  8. ஆன்சர் -விடை 
  9. ஆல் தி பெஸ்ட் -வாழ்த்துக்கள்

நிற்க அதற்குத் தக

நீங்கள் படித்து முடித்த பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.

  1. துறை அறிவைத் தமிழாக்கம் செய்வேன் 
  2. கலைச்சொற்களைத் தமிழ்ப்படுத்துவேன்.
  3. கண்டுபிடிப்புகளைத் தமிழ்நூலாக்குவேன்.
  4. துறையைத் தமிழோடு இணைப்பேன்
  5. தமிழறிவைத் துறையில் நுழைப்பேன்.

திருக்குறள் குறுவினா

1.கரப்பிடும்பை இல்லார்’ இத்தொடரின் பொருள் கூறுக.

கரப்பிடும்பை இல்லார்: 

‘தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பத்தைத் தராத நல்லார்’ 

2.தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்ப்பாடுகளையும் எழுதுக.

  1. தஞ்/சம் – நேர் நேர் – தேமா
  2. எளி/யர் – நிரை நேர் – புளிமா
  3. பகைக்/கு – (நிரை நேர்) – நிரைபு - பிறப்பு

3.வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

குறளின் கருத்து:

ஏளனம் செய்யாமல் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழும்.

4.பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்? ஏன் என்பதை எழுதுக.

பெரிய கத்தி, இரும்பு, ஈட்டி, உழைத்ததால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்.

அ).உழைத்ததால் கிடைத்த ஊதியம்- கூரான ஆயுதம்.

ஆ).அது, பகைவரை வெல்லும் ஆயுதம்.

சிறுவினா

1.வள்ளுவம் , சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.

  1. அமைச்சு 
  2. கருவி, 
  3. காலம், 
  4. செயல், 
  5. முறை, 
  6. நுண்ணறிவு, 
  7. நூலறிவு, 
  8. உலகியல் ஆகியவற்றை அமைச்சரும் நாமும் அறிந்து செயல்பட வேண்டும்.

2.பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

  1. அன்பு, 
  2. துணை, 
  3. வலிமை, 
  4. துணிவு, 
  5. அறிவு, 
  6. உதவி ஆகியவை இல்லாதவர் எளிதில் பகைக்கு ஆட்படுவார்.


இயல் 5

 

இயல் 5

பலவுள் தெரிக 

  1. ‘மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  2. அருந்துணை என்பதைப் பிரித்தால்______  அருமை+துணை
  3. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது_____ வினா. “அதோ அங்கே நிற்கும்” என்று மற்றொருவர் கூறியது______   விடை.அறியா வினா, சுட்டுவிடை
  4. “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை” என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?கல்வி
  5. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்_____ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்_______.மன்னன், இறைவன்

சிறு வினா

1. “கழிந்த பெரும் கேள்வியினால் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டு புலவன் தென்சொல்”-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல் மிகு கேண்மையினான் யார்?

  1. கழிந்த பெரும் கேள்வியினான்-மன்னன் குலேச பாண்டியன்
  2. காதல் மிகு கேண்மையினான்-புலவர் இடைக்காடனார்

2.செய்குத் தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

  • அருளைப் பெருக்கு 
  • அறிவைத் திருத்து 
  • மருளை அகற்று 
  • கல்வியைப் போற்று

3. அமர்ந்தான்- பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்+(ந்)த்+த்+ஆன்

  1. அமர்-பகுதி
  2. த்-சந்தி
  3. ந் ஆனது விகாரம் 
  4. த் -இறந்தகால இடைநிலை 
  5. ஆன்-ஆண்பால் வினைமுற்று விகுதி

4.இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்து எழுதுக.

  1. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா வினா 
  2. மின்சாரம் இருக்கிறதா, இல்லையா? -ஐய வினா

சிறுவினா

1.மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புப் செய்தது ஏன்? விளக்கம் தருக.

  1. இடைக்காடனார் பாடினார் 
  2. மன்னன் அவமதித்தான்
  3. இறைவனிடம் புலவர் முறையிட்டார்
  4. இறைவன் வேறுகோவிலில் தங்கினார்
  5. மன்னன் தன் தவற்றை உணர்ந்தான்
  6. புலவருக்குச் சிறப்புச் செய்தான்.

2.உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப் பாதையில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

  1. கற்றவர் வழி அரசு செல்லும் 
  2. பிச்சை புகினும் கற்கை நன்றே
  3. அருளைப் பெருக்கும்
  4. அறிவைச் சீராக்கும்
  5. மயக்கம் அகற்றும்
  6. அறிவுக்குத் தெளிவு தரும் 
  7. உயிருக்கு அரிய துணையாய் வரும் 
  8. எனவே, கற்க வேண்டும் 

3.ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு 

ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா. அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதை காதணிக்கேட்பியில் கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலி வாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிக் கேட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார். இப்பகுதியில் இருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

1. மொழிபெயர்ப்பு என்பது யாது? 

2. விளக்குவது என்பது யாது? 

3. மொழிபெயர்ப்பாளரின் பணி யாது?

4. ஐ.நா. அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டு இருக்கிறதா?

5. ஐ.நா. அவையில் மொழிபெயர்ப்பாளர் எங்கு அமர்ந்திருப்பார்?

4.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

விளக்கம்

  1. முயற்சி செய்தால் செல்வம் சேரும். 
  2. முயற்சி இல்லாவிட்டால் வறுமையே உண்டாகும்.  
  3. பாடலின் தொடக்கம்முதல் முடிவுவரை ஆற்று நீரின் போக்கைப் போலப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது, ‘ஆற்று நீர்ப் பொருள்கோள்’ ஆகும்.

நெடுவினா

1.இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக. 

திருவிளையாடற் புராணம்

  1. இடைக்காடனார் மன்னனின் அவையில் கவிதை படித்தார் 
  2. மன்னன் தன் புலமையை மதிக்காமை குறித்து இறைவனிடம் முறையிட்டார் 
  3. இறைவன் கோவிலைவிட்டு நீங்கினார்.
  4. கோவிலைவிட்டு நீங்கிய காரணம் அறியாது மன்னன் இறைவனை வேண்டினார் 
  5. புலவரை மகிழ்விக்க வந்ததாக இறைவன் பதில் கூறினார் 
  6. மன்னன் தன் பிழையைப் பொறுத்து அருளுமாறு இறைவனிடம் வேண்டினார். 
  7. மன்னன், புலவருக்கு மரியாதை செய்தார்
  8. மன்னன், புலவரிடம் மன்னிப்பை வேண்டினார் 

2.“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துக்களை விவரிக்க.

புதிய நம்பிக்கை

முன்னுரை

கல்வியறிவற்ற சமூகத்திலிருந்து ஒற்றை ஒளிச்சுடராக வெளிவந்து, அந்த சமூகத்தையே ஒளிவெள்ளத்தில் நிரப்பியவர்களில் ஒருவர்தான் மேரி.

மேரியின் குடும்பம்

  1. கருப்பினச்சிறுமி மேரி. 
  2. பகல்முழுவதும் பருத்திக்காட்டில் வேலை

உன்னால் படிக்க முடியாது

  1. வெள்ளைக்காரச் சிறுமிகளுடன் விளையாடினாள்; 
  2. அங்கு இருந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தாள். 
  3. “புத்தகத்தை என்னிடம் கொடு. நீ இதை எடுக்கக்கூடாது. உன்னால் படிக்க முடியாது” என்ற வெள்ளைக்காரச் சிறுமியின் வார்த்தைகளால் மனம் கலங்கினாள்.

மேரியின் விருப்பம்

  1. மேரி படிக்க விரும்பினாள்
  2. அங்குப் பள்ளிக்கூடம் கிடையாது.

பட்டம் பெற்ற மேரி

  1. மிஸ் வில்சன் படிக்க அழைத்தாள். 
  2. பத்துமைல் தூரம் நடந்துசென்று படித்தாள். 
  3. பட்டம் பெற்றாள். 

மேரியின் உயர்கல்விப் பயணம்

  1. உயர்கல்வி கற்க, ஊரே வழியனுப்பி வைத்தது
  2. வெள்ளைக்காரப்பெண் பணம் அனுப்பினாள்.

முடிவுரை 

ஒடுக்கப்பட்ட சமூகம் உயரக் காரணமாக அமைந்தது, மேரி பெற்ற கல்வி.

2.தமிழின் இலக்கிய வளம் - கல்வி மொழி- பிற மொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் - அறிவியல் கருத்துக்கள்- பிறதுறைக் கருத்துக்கள்- தமிழுக்குச் செழுமை- மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக்கலை’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

முன்னுரை

ஒரு மொழியில் ஏற்படும் புதுமைகளை வேற்றுமொழிக்குக் கொண்டுவரும் அரிய கலையே ‘மொழிபெயர்ப்புக்கலை’.

தமிழின் இலக்கியவளம்

  1. சங்க இலக்கியங்கள், 
  2. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், 
  3. ஐம்பெருங்காப்பியங்கள், 
  4. பக்திப் பாடல்கள், 
  5. சிற்றிலக்கியங்கள்.

கல்வி மொழி

  1. மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதில் பெற முடியும்.
  2. பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள்
  3. ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், 
  4. வால்ட் விட்மனின் புதுக்கவிதைகள், 
  5. ஜப்பானிய ஹைக்கூக் கவிதைகள் 

அறிவியல் கருத்துகள்

  1. உலகம் ஐம்பூதங்களால் ஆனது. 
  2. உயிர் வகை. 
  3. அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி. 
  4. சிறுபுல் நீர் பனையளவு காட்டும். 

பிறதுறைக் கருத்துகள் 

தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால்தான் வளர்ச்சி பெறுகின்றன.

தமிழுக்குச் செழுமை

மொழிபெயர்ப்பினால் புதியசொற்கள் உருவாகி, மொழிவளம் ஏற்படுகிறது. 

முடிவுரை

மொழிவேலியை அகற்றும் பணியை மொழிபெயர்ப்பு செய்கிறது.

3.மதிப்புரை எழுதுக.

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/ கட்டுரை/ சிறுகதை/ கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

மதிப்புரை

நூலின் தலைப்பு: மணிமேகலை

நூலின் மையப் பொருள் : மணிமேகலை மேற்கொண்ட துறவு

மொழிநடை : நாவல்

வெளிப்படுத்தும் கருத்து : 

அழகு நிலை இல்லாதது. 

பசிப்பிணி போக்குக. 

துறவின் மேன்மை.

நூலின் நயம் : 

தீவதிலகையின் கூற்று

அறவண அடிகளின் கூற்று

ஆதிரையின் கணவன் சாதுவன் கூற்று ஆகியவை நயம் வாய்ந்தவை

நூலின் கட்டமைப்பு : 

     66 தலைப்புகளில் நாவல் வடிவில் விளக்குகிறது.

சிறப்புக் கூறு : 

     மூலநூலான மணிமேகலையைவிட, நாவல் வடிவிலமைந்த இந்த நூல் எளியநடையில் கதை சொல்கிறது. ஒரேமூச்சில் படித்துமுடித்துவிட வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.

நூலின் ஆசிரியர்: என். சொக்கன்

தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

  1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருட்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும்.
  2. காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது.
  3. காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலை ஆக்குகிறது
  4. பசுமையான காட்சியைக் காணுதல் கண்ணுக்கு நல்லது.
  5. பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்பில் அவரை மிஞ்ச ஆள் கிடையாது

புதிர்ப்பாடலைப் படித்து விடையைக் கண்டுபிடிக்க

தார்போன்ற நிறமுண்டு கரியும் இல்லை

பார் முழுதும் பறந்து திரிவேன் மேகமும் இல்லை

சேர்ந்து அமர்ந்து ஒலிப்பேன் பள்ளியும் இல்லை

சோர்ந்து போகாமல் வீடு அமைப்பேன் பொறியாளரும் இல்லை

வீட்டுக்கு வரும் முன்னே, வருவதை கூறுவேன்.

நான் யார்?

விடை: காகம்

அகராதியில் காண்க

  1. மன்றல்- திருமணம்
  2. அகராதி- அகரமுதலி
  3. மருள்- மயக்கம்
  4. அடிச்சுவடு- காலடியின் அடையாளம்
  5. தூவல்- பேனா

கலைச்சொல் அறிவோம்

  1. Emblem -சின்னம்
  2. Thesis -ஆய்வேடு
  3. Intellectual -அறிவாளர்
  4. Symbolism -குறியீட்டியல்

நிற்க அதற்குத் தக

பள்ளியில் நான்

  1. உடன்பயிலும் மாணவர்களின் திறமைகளைப் பாராட்டுவேன்
  2. நண்பர்களுக்கு உதவி செய்வேன்
  3. வகுப்பறையைத் தூய்மையாக வைத்திருப்பேன்
  4. ஒழுக்கத்தைப் கடைப்பிடிப்பேன்

வீட்டில் நான்

  1. பெற்றோருக்கு உதவி செய்வேன்.
  2. செடிகொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவேன்
  3. வீட்டைத் தூய்மையாக வைத்திருப்பேன்.
  4. பெற்றோரை மதிப்பேன். 

மொழிபெயர்ப்பு

  1. Lute music -யாழிசை
  2. Chamber-அறை
  3. To look up-எட்டிப்பார்த்தேன்
  4. Grand-daughter-பேத்தி
  5. Rote-நெட்டுரு
  6. Didactic compilation-நீதி நூல் திரட்டு

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க 

1.கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான் 

அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

2.மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும் 

குளிர்ந்த நிழல்தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3.வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது 

மேடுபள்ளம் நிறைந்த வாழ்க்கைப் பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது

4.கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும் 

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

5.குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்

சுற்றுலா செல்ல விரும்பும் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும். 

அட்டவணையில் விடுபட்டதை எழுதுக 

  1. சொன்ன அம்மா -பெயரெச்சத் தொடர்
  2. அம்மா, சொல்-விளித்தொடர்
  3. அரசர் தந்தார் -எழுவாய்த் தொடர்
  4. எனக்குத் தந்தார்-வேற்றுமைத் தொடர்
  5. சிரித்த பெண் -பெயரெச்சத் தொடர்
  6. பெண்ணே, சிரி-விளித்தொடர்
  7. ஓடி விளையாடினான்-வினையெச்சத் தொடர்
  8. என்னுடன் வா-வேற்றுமைத் தொடர்

இயல் 4

பத்தாம் வகுப்பு  மெல்லக் கற்போர் இயல் 4

பலவுள் தெரிக

1. “உனதருளே பார்ப்பன் அடியேனே”- யாரிடம் யார் கூறியது?

இறைவனிடம் குலசேகராழ்வார்

2. தலைப்புக்கும் குறிப்புகளுக்கும் பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க. 

தலைப்பு: செயற்கை நுண்ணறிவு 

குறிப்புகள்: கண்காணிப்புக் கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது

விடை: தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

3. பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

வானத்தையும் பேரொலியையும்

4. குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.

பூனையார் பால் சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழு அமைதி முறையே-

பால் வழுவமைதி, திணை வழுவமைதி

5. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

இலா

குறுவினா

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா. செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்.

செயற்கை நுண்ணறிவு

  1. ஆபத்தான வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் 
  2. குழந்தைகளைப் பராமரிக்கும் ரோபோக்கள் 

2. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் -இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

கால வழுவமைதி

  1. இது திட்டமிடப்பட்ட உறுதியான நிகழ்ச்சி 
  2. எனவே, இது காலவழுவமைதி.

3. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

பெருமாள் திருமொழி

  1. நோயாளி மருத்துவரை நம்புவார்.  
  2. இந்த  நம்பிக்கை நோயாளியை விரைவில் குணமடையச் செய்யும்.

4. உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல்வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.

பரிபாடல்-புவியின் உருவாக்கம்

  1. பூமியில் தொடர்ந்து பெய்த மழையால் கடலும் நிலமும் உருவாகியது.
  2. பின்னர், உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் உருவானது 

5. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்து கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றி பெருமையாகக் கூறினார். -இதில் உள்ள திணை வழுவமைதிகளைத் திருத்தி எழுதுக

திணை வழுவமைதிகள்- திருத்தம்

சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்து கத்துமே தவிர கடிக்காது.

சிறுவினா

1. மாளாத காதல் நோயாளன் போல்” என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.

பெருமாள் திருமொழி

  1. நோயாளி அறுவைச்சிகிச்சை தரும் மருத்துவரை நேசிப்பார். 
  2. அதைப்போல அடியார் இறைவனையே  நேசிப்பார்.

2. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக. 

செயற்கை நுண்ணறிவு

  1. மனிதர்கள் செய்யும் வேலைகளை மட்டுமல்லாமல் 
  2. மனிதனால் செய்ய இயலாத செயல்களையும் 
  3. அலுப்புத் தரும் செயல்களையும் செய்து 
  4. மனித வாழ்வைச் செயற்கை நுண்ணறிவு மேம்படுத்துகிறது.

3. மனிதர்களின் மூளையைப் போன்றது செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க தொழில்நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனித குலத்துக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு எதிர்காலத் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் எழுதுக.

எதிர்காலத் தொழில்நுட்பம்

கணினி மென்பொருள், 

  1. தொலைபேசி அழைப்பு விடுக்கும். 
  2. செயலியைத் திறக்கும். 
  3. உலாவியில் தேடும். 
  4. எந்தக் கடையில் எது விற்கும் என்று சொல்லும். 
  5. நூல்களைப் பட்டியலிடும். 
  6. கருத்துரைக்கும். 

4. “நேற்று இரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலட்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். “இதோ சென்று விட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக் கொடுத்து, “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டேன். என் தங்கையும் அங்கே வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்து விடப்பட்ட இலட்சுமி தொட்டியில் இருந்த நீரைக் குடித்தாள். இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

திணை வழுவமைதி 

  1. இலட்சுமி கூப்பிடுகிறாள்.
  2. இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்
  3. “என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டேன்.

இட வழுவமைதி

நீயும் இவனும் விளையாடுங்கள்

கால வழுவமைதி

  1. நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.
  2. இதோ சென்று விட்டேன்.

மரபு வழுவமைதி

வாழைத்தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது.

நெடுவினா

1. ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேநீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்

முன்னுரை 

நாம் இப்போது செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் இருக்கிறோம். 

செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்

  1. குழந்தைப் பராமரிப்பாளராக…
  2. உற்ற தோழனாக …
  3. கடின வேலைகளைச் செய்யும் பணியாளராக…

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்

  1. உற்பத்தி மற்றும் வணிகத்தில்…
  2. போக்குவரத்தில்…

எதிர்காலத்தில்…

  1. மனிதனுடன் போட்டியிடும் போட்டியாளராக…
  2. உதவியாளராக…
  3. மருத்துவத்தில்…
  4. ஒவ்வொரு துறையிலும் அளவிடற்கரிய முன்னேற்றத்தைத் தரும். 

முடிவுரை 

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கண்டு நாம் அச்சப்பட வேண்டியதில்லை. 

2. நம் முன்னோர் அறிவியல் கருத்துக்களை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பரிபாடல்-புவியின் உருவாக்கம்

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்!  இன்று இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதி காலந்தொட்டு இயங்கிவரும் தமிழ் மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளது இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்… 

புவியின் உருவாக்கம் குறித்து இன்றைய அறிவியல் கூறுகின்ற கருத்து கூறப்பட்டிருக்கிறது.  

  1. எதுவும் இல்லாத வெளியில் கரு தோன்றியது
  2. பின்னர் வானம் தோன்றியது
  3. பின்னர் கரு கிளர்ந்து வளர்ந்தது
  4. பின்னர் வெடித்துச் சிதறியது 
  5. பின்னர் நெருப்புப் பந்து உருவானது
  6. பின்னர் மழை பெய்தது 
  7. பின்னர் கடலும் நிலமும் உருவாயின 
  8. பின்னர் உயிர்கள் தோன்றி வளர ஏற்ற சூழல் உருவானது.

3. “அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம்” என்னும் தலைப்பில் கற்பனை கதை ஒன்று எழுதுக.

அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப்பயணம்

முன்னுரை

அறிவை விட முக்கியமானது கற்பனைத் திறன். 

ஹாக்கிங்குடன் நான்…

  1. நாசா நடத்திய தேர்வில் வென்றேன். 
  2. ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களைச் சந்தித்தேன் 

தன்னம்பிக்கை மனிதர்

  1. கொலம்பியா விண்வெளி ஓடத்தில் அமர்ந்தோம். 
  2. அவர் புன்முறுவல் செய்தார்.  
  3. அவரின் தன்னம்பிக்கை மெய்சிலிர்க்க வைத்தது.

கலந்துரையாடினோம்

  1. இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது 
  2. விண்மீனின் ஆயுட்கால முடிவில் சுருங்கும்.
  3. ஈர்ப்பு விசையில் இருந்து எதுவும் தப்பாது.
  4. இறுதியில் வெடித்துச் சிதறிவிடும். 
  5. கருந்துளை ஆக்க ஆற்றல் 

பெற்ற விருதுகள்

  1. அமெரிக்க அதிபர் விருது
  2. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் விருது

நகைச்சுவை உணர்வு

விதிதான் தீர்மானிக்கிறது என்றால், சாலையைக் கடக்கும்போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறார்கள்? 

துணிச்சல்காரர்

  1. பலூனில் பறந்தார். 
  2. போயிங்கில் பயணம் செய்தார்.

உலகிற்கு எடுத்துக்காட்டு

  1. உடல்ஊனம் குறையன்று. 
  2. அறிவை ஆளும்தன்மை இன்மையே குறையாகும்

முடிவுரை

விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். நன்றி கூறி விடைபெற்றேன். அம்மா எழுப்பினார். கண்டது கனவு.

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Malar : Devi, switch off the lights when you leave the room.

Devi : yeah.  We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi : who knows? In feature our country may launch artificial moons to light our night time sky!

Malar : I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi : superb news! If we have lunch artificial moons they can assist in disaster relief by beaming light on areas that lost power!

 மலர் : தேவி, நீ அறையை விட்டுச்செல்லும்போது விளக்குகளை அணைத்துவிட்டுச் செல்.

தேவி: ஆமாம், நாம் மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும்

மலர்: இரவில் நம் வீதிகளை ஒளிரச் செய்வதற்காக நம்நாடு நிறைய மின்சாரத்தைச் செலவு செய்கிறது

தேவி: யாருக்குத் தெரியும்? எதிர்காலத்தில் நம்நாடு இரவுநேர வானத்தை ஒளிரச் செய்ய செயற்கைநிலவுகளை நிறுவலாம்.

மலர்: வேறுசில நாடுகளும் எதிர்காலத்தில் இந்த ஒளியூட்டும் செயற்கைக்கோள்களை விரைவில் நிறுவ உள்ளதாக நான் படித்திருக்கிறேன்.

தேவி: அற்புதமான செய்தி! செயற்கை நிலவுகளை நாமும் நிறுவினால், மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் ஒளிவீசச் செய்வதன்மூலம் பேரிடர் மீட்பில் அவற்றைப் பயன்படுத்தலாம்.

பத்தியைப் படித்து பதில் தருக

பருப்பொருள்கள் குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகியஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக் காலம் கடந்தது

1. பத்தியில் உள்ள அடுக்கு தொடர்களை எடுத்து எழுதுக.

மீண்டும் மீண்டும்

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

தொடர்ந்து பெய்த மழையால் பூமி வெள்ளத்தில் மூழ்கியது.

3. பெய்த மழை- இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

பெய்மழை 

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

பெருவெடிப்புக் கொள்கை 

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவீர் கருதுவன யாவை?

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியவை அடங்கிய சூழலே உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாகும்.

வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?

எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளது போல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும்.

பறவைகளுக்கு பார்த்தல் கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்

யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு

திருத்தம்

காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித்துளைகள் இறகுகளால் மூடியிருக்கும். மற்றபடி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்குக் காது உண்டு. காது கேட்கும்.

பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சி பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வு குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றே கூறலாம்.

கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ) இயற்கை- செயற்கை

செயற்கையை விடு. இயற்கையை நேசி.

ஆ) கொடு- கோடு 

கோடு போட்டுவிட்டுக் கொடு.

இ) கொள்- கோள் 

துணைக்கோளில் குடியேற ஆசைகொள்.

ஈ) சிறு- சீறு 

சிறுபாம்பும் சீறும்.

உ) தான்-தாம் 

நான்தான் படித்தேன். அவர்தாம் பரிசளித்தார்.

ஊ) விதி- வீதி 

வீதியில் செல்ல விதி உண்டா?

தொடரைப் படித்து விடையைக் கண்டறிக 

1.நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் ________(கற்றல்)

2.விதைக்கு தேவை எரு எனில், கதைக்குத் தேவை_______(கரு)

3.கல் சிலை ஆகுமெனில், நெல் ______ஆகும். (சோறு) 

4.குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து ______(எழுத்து)

5.மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது_______(பூவில்)

குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக 

குறிப்பு: எதிர்மறையான சொற்கள்

1.மீளாத் துயர்- மீண்ட இன்பம்

2.கொடுத்துச் சிவந்த- கொடாது கறுத்த  

3.மறைத்துக் காட்டு- மறையாது காட்டு 

4.அருகில் அமர்க- தொலைவில் நிற்க

5.பார்த்த படம்- பார்க்காத படம் 

6.எழுதாக் கவிதை -எழுதிய கவிதை

அகராதியில் காண்க

1.அவிர்தல்-ஒளிர்தல் 

2.அழல்-நெருப்பு

3.உவா -முழுநிலவு

4.கங்குல்-இரவு

5.கனலி-நெருப்பு

கலைச்சொல் அறிவோம் 

1.Nanotechnology – மீநுண் தொழில்நுட்பம்

2.Biotechnology -உயிரித் தொழில்நுட்பம்

3.Ultraviolet rays -புற ஊதாக் கதிர்கள்

4.Space technology -விண்வெளித் தொழில்நுட்பம்

5.Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்

6.Infrared rays -அகச்சிவப்புக் கதிர்கள்

கட்டுரை- விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்

முன்னுரை

ஞானப் பெண்ணாய் ஞாலம் அளந்தாள் கல்பனா. 

குழந்தைப் பருவம்

அரியானாவில் 1962இல் பிறந்தார். 
டாட்டா அவர்களைப் பார்த்து வானில் பறக்க ஆசைப்பட்டாள்

கல்வி

தாகூர் அரசுப் பள்ளியிலும், பஞ்சாப் கல்லூரியிலும் படித்தார். 

பின்னர் அமெரிக்காவில் படித்தார்.

பணி

1995ஆம் ஆண்டு நாசா விண்வெளிவீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.

விமானம் ஓட்டக் கற்றார்.

சாதனைகள்

1997ஆம் ஆண்டு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கினார். 

விபத்து

பிப்ரவரி 1, 2003 இல் விண்கலம் வெடித்து இறந்தார்.. 

விருதுகள்

கர்நாடக அரசு கல்பனா சாவ்லா விருது வழங்கி வருகிறது. 

இஸ்ரோ கல்பனா  விண்கலத்தை ஏவியது. 

முடிவுரை

வானை அளப்போம், கடல் மீனை அளப்போம்; சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்.

பா நயம் பாராட்டல்

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு

கோல வெறிபடைத்தோம்;

உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ?

மனத்தை வாழ்த்துதல்

திரண்ட கருத்து

நிலாவையும் விண்மீனையும் காற்றையும் சமமாகக் கருதி, அவற்றின் அமுதைப் பருகி, அவற்றிலே நிலைகொண்டோம். மனப்பறவையை எங்கும் ஓட்டி மகிழ்ந்திடுவோம். பழவண்டியில் பலாச்சுளையை வட்டமிட்டு வண்டு பாடுவதில் ஒன்றும் வியப்பில்லையே.

சொல் நயம்

அமுதக்குழம்பு 

கோலவெறி

சந்த நயம்

சந்த நயம் வந்துள்ளது.

மோனை நயம்

குழம்பை 

குடித்தொரு 

எதுகை நயம்

நிலாவையும்

குலாவும்

இயைபு நயம்

படைத்தோம்

மகிழ்ந்திடுவோம்

அணி நயம்

உருவக அணி.

பா வகை

ஆசிரிய விருத்தம்.

நிற்க அதற்குத் தக

தொலைக்காட்சி மற்றும் திறன்பேசிகளில் மூழ்கி இருக்கும் நண்பர்களுக்கு நீங்கள் காட்டும் வழி யாது?

1.நண்பர்களுடன்  விளையாடு

2.நூலகங்களுக்குச் சென்று வாசி.

3.நண்பர்களுடன் பேசி மகிழ்.

4.உடற்பயிற்சி செய்

5.பெற்றோருக்கு உதவிசெய்